For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகாராஷ்டிராவில் திடீரென்று தீப்பிடித்த கார்: உடல் கருகி பலியான தொழில் அதிபர்

By Siva
Google Oneindia Tamil News

நாசிக்: மகாராஷ்டிராவில் கார் திடீர் என்று தீப்பிடித்து எரிந்ததில் அதை ஓட்டிச் சென்ற தொழில் அதிபர் உடல் கருகி பலியானார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கை சேர்ந்தவர் ரிச்சர்ட் மார்ஷல் டிசோசா(65). தொழில் அதிபர். அவர் அப்பகுதியில் சி அன்ட் எம் ஃபார்மிங் கம்பெனி வைத்துள்ளார். அவருக்கு இடுப்புக்கு கீழ் உள்ள பாகங்களில் பாதிப்பு இருந்ததால் அவர் தனது மாருதி 800 காரில் சில மாற்றங்கள் செய்தார். அவர் பிரேக் மற்றும் ஆக்சிலேட்டரை கையால் பயன்படுத்தும் வகையில் மாற்றங்கள் செய்து வைத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை அவர் தனது கம்பெனிக்கு காரில் கிளம்பினார். கோவர்தனே கிராமம் அருகே சென்று கொண்டிருக்கையில் அவரது கார் திடீர் என்று தீப்பிடித்து எரிந்தது. அவரால் காரில் இருந்து வெளியே வர முடியவில்லை. இதையடுத்து அவர் உடல் கருகி பரிதாபமாக பலியானார்.

கார் தீப்பிடித்ததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

English summary
Local industrialist Richard Marshal D'souza was charred to death when his car caught fire here in North Maharashtra, police said on Monday. The incident took place last evening near Goverdhane village when D'souza, Founder-Chairman of C&M Farming Company, was driving his Maruti 800 car, they said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X