For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ம.பியில் பிறந்த குழந்தையின் மூக்கை கடித்த எலி- மருத்துவமனை ஊழியர்கள் சஸ்பெண்ட்!

Google Oneindia Tamil News

தார்: மத்திய பிரதேசத்தில் பிறந்த குழந்தையின் மூக்கை எலி கடித்த காரணத்தினால் மருத்துவமனை ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் தார் மாவட்ட மருத்துவமனையில், பிறந்து 45 நாட்களே ஆன குழந்தையின் மூக்கை எலி கடித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனையில் பணியாற்றி செவிலியர் மற்றும் குழந்தைகள் பராமரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Infant's Nose Bitten by Rat; Action Against 2 Hospital Staff in Madhya Pradesh

மூன்று தினங்களுக்கு முன்பாக நடந்த இந்த கொடூர சம்பவம் நேற்றுதான் வெளிச்சத்திற்கு வந்தது. தனியார் மருத்துவமனையில் பிறந்த அந்த குழந்தையின் நிலை கவலைக்கிடமானதையடுத்து மாவட்ட மருத்துவமனைக்கு பெற்றோர்கள் கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களிடம் குழந்தை காட்டப்படவில்லை. குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து அந்த குழந்தையின் மூக்கை எலி கடித்துள்ளது.

இது குறித்து, மருத்துவமனை அதிகாரியிடம் புகார் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து 2 பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் இதே போன்று, ஆந்திர மாநிலம் குண்டூர் அரசு பொது மருத்துவமனையில் எலி கடித்ததால் பச்சிளம் குழந்தை இறந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
A month-old baby boy was bitten by a rat at the district hospital in Madhya Pradesh's Dhar, prompting the authorities to suspend a staff nurse and terminate services of the baby's caretaker.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X