For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மும்பை விழாவில் நெகிழ்ச்சி.. ரத்தன் டாடாவின் காலில் விழுந்த இன்போசிஸ் நாராயணமூர்த்தி!

Google Oneindia Tamil News

மும்பை: மும்பையில் நடந்த விருது வழங்கும் விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதை ரத்தன் டாடாவிற்கு வழங்கிய இன்போசிஸ் நாராயணமூர்த்தி,ரத்தன் டாடாவின் காலில் விழுந்து வணங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மும்பையில் டைகான் அமைப்பு சார்பில் 11 ஆண்டு விருது வழங்கும் விழா ஜனவரி 28ம் தேதி நடந்தது. இந்த விழாவில் டாடா சன் நிறுவனத்தின் உரிமையாளரான தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இந்த விருதினை இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி ரத்தன் டாடாவிற்கு வழங்கி கௌரவித்தார்.. விருதை வழங்கிய நாராயணமூர்த்தி, விழா மேடையில் திடீரென ரத்தன் டாடாவின் கால்களில் விழுந்து வணங்கினார். இதை சற்றும் எதிர்பார்க்காத ரத்தன் டாடா அவரை கையை பிடித்து தூக்கினார்.

எடப்பாடியார் நினைத்தால் ராக்கெட் எடுத்துக்கிட்டு நிலவில் ஆம்ஸ்ட்ராங் போல் இறங்குவார்.. அமைச்சர் பலே!எடப்பாடியார் நினைத்தால் ராக்கெட் எடுத்துக்கிட்டு நிலவில் ஆம்ஸ்ட்ராங் போல் இறங்குவார்.. அமைச்சர் பலே!

பணிவு

இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் இந்த செயலை கண்டு பலரும் நெகிழ்ந்து போனார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் பணிவு, மரியாதை, அன்புடன் இருக்கும் இன்போசிஸ் நாராயணமூர்த்தியை பலரும் பாராட்டினார்கள்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

இதனிடையே ரத்தன் டாடா இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார், "இந்த விருதை ஒரு சிறந்த நண்பர் நாராயண மூர்த்தியின் கைகளில் டைகான் விருதை பெற்றது மிகப்பெரிய மரியாதை. நான் உண்மையிலேயே பணிவன்புடன் ஏற்றுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

சிறந்த பாடம்

இந்த வீடியோ குறித்து ஒருவர் தனது பதிவில், , "இந்த படம் தாழ்மை மற்றும் எளிமை அனைத்தையும் வரையறுக்கிறது, இன்போசிஸ் நாராயண மூர்த்தி , ரத்தன் டாடாவின் கால்களைத் தொட்டு அவரது ஆசீர்வாதங்களைத் தேடுகிறார். இது நம் அனைவருக்கும் ஒரு பாடம்". என்று கூறியுள்ளார்.

கற்றுத்தருவோம்

மற்றொருவர் எழுதியிருக்கிறார், "ஐயா, இது உங்கள் நல்ல குணத்தையும் மரியாதையையும் நிரூபிக்கிறது, நீங்கள் ஆசீர்வாதங்களுக்காக ரத்தன் டாடாஜியின் கால்களைத் தொட்டுக் குனிந்தபோது. பெற்றோராக இருப்பதால், குழந்தைகளிடமும் நம்முடைய உயர்ந்த கலாச்சாரத்தை நாம் இப்படித்தான் ஊக்குவிக்க வேண்டும். நாராயண மூர்த்தி".என்று கூறியுள்ளார்.

பணிவான தொழில்அதிபர்கள்

மற்றொருவர் போட்ட டுவிட்டில் "இரண்டும் பெரிய போட்டி நிறுவனங்கள், இரண்டிலும் மிகவும் பணிவான தொழிலதிபர்கள். நாராயண மூர்த்தி ரத்தன் டாடாவின் கால்களைத் தொடுவது இணையத்தில் மிகச் சிறந்த விஷயம், இன்று" என்று கூறியுள்ளார்

English summary
Life Time Achievement Award to Ratan Tata and Narayana Murthy took Tata's blessings.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X