For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2,000 பேருக்கு புரமோஷன், 100 சதவீத வேரியபிள் பே கொடுத்த இன்போசிஸ்

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: இன்போசிஸ் நிறுவனம் சிறப்பாக பணியாற்றும் 2 ஆயிரம் ஊழியர்களுக்கு பதவி உயர்வு அளித்துள்ளது.

நாட்டின் இரண்டாவது பெரிய ஐடி ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் இரண்டாவது காலிறுதியில் லாபம் ஈட்டியுள்ளது. இந்நிலையில் அந்நிறுவனம் 2 ஆயிரத்து 67 ஊழியர்களுக்கு பதிவு உயர்வு அளித்துள்ளது. மேலும் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான வேரியபிள் பேவை 80 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்திக் கொடுத்துள்ளது.

Infosys promotes 2,000, increases variable payout

முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் 100 சதவீத வேரியபிள் பே வழங்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் துவங்கிய நிதியாண்டில் இதுவரை 4 ஆயிரத்து 711 ஊழியர்களுக்கு பதவி உயர்வு அளித்துள்ளது இன்போசிஸ். அதில் 2,600 பேர் ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலிறுதியாண்டில் பதிவு உயர்வு பெற்றுள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் முதல் இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரியும் பலரும் வேலையை ராஜினாமா செய்து வருகின்றனர். அவ்வாறு நிறுவனத்தை விட்டு செல்வோரை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த நிதியாண்டில் 20 ஆயிரம் பேரை கேம்பஸ் இன்டர்வியூ மூலம் தேர்வு செய்ய உள்ளது இன்போசிஸ் என்று அந்நிறுவனத்தின் சிஓஓ பிரவீன் ராவ் தெரிவித்துள்ளார்.

English summary
India's second largest software exporter Infosys has given promotion to 2,067 top-performing employees and increased variable payouts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X