For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாரிக்கர் விவகாரம்.. பாஜகவின் மனிதாபிமானமற்ற செயல்.. உமர் அப்துல்லா சாடல்

Google Oneindia Tamil News

Recommended Video

    பாரிக்கர் விவகாரம்: உமர் அப்துல்லா சாடல்- வீடியோ

    கோவா: கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் நோய் பாதிப்பில் இருந்து சமாளித்து மீண்டு வரவேண்டும் அதற்கு, அவருக்கு அழுத்தம் தரக் கூடாது என்ற ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    பனாஜியில் ஓடும் மண்டோவி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் பாலப் பணிகளை அம்மாநில முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் பார்வையிட்டார். மூக்கில் உணவு குழாய் மாட்டியிருந்த நிலையில் அவர் பார்வையிட்டபோது எடுத்த புகைப்படம் செய்தியாக வெளியானது.

    Inhuman to force Parrikar to continue working: Omar Abdullah

    இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள உமர் அப்துல்லா, கணைய நோயால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் மனோகர் பாரிக்கர், மூக்கில் சொருகப்பட்ட குழாயுடன், உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டு, பொறியியலாளர்களுடன் கலந்தாலோசிக்கிறார். இது "மனிதாபிமானமற்றது" என்றும் பணி செய்வதை புகைப்படமாக வெளியிடுமாறு வற்புறுத்தி அவருக்கு அழுத்தம் தரப்படுவதாக கூறினார்.

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த அக்டோபர் 14 ம் தேதி தான், மனோகர் பாரிக்கர் டிஸ்சார்ஜ் ஆனார். அதன் பிறகு முதல் முறையாக அவரது புகைப்படம் வெளியாகி உள்ளது.

    இதற்கிடையே, மண்டோவி ஆற்று பாலம் பணிகள் மட்டுமின்றி, ஜூவாரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பணிகளையும் முதல்வர் மனோகர் பாரிக்கர் பார்வையிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரம், நோயால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் மனோகர் பாரிக்கர், அலுவலகத்திற்கு வராமல் இருப்பதால் நிர்வாகப் பணிகள் சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

    English summary
    Umar Abdullah said it is "inhuman" to force Parrikar to continue working and doing "photo ops". Why can't he be allowed to deal with his illness without all this pressure and tamasha?"
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X