India
  • search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதலிரவு.. "லிப்ஸ்டிக், வளையலுடன் மாப்பிள்ளை".. அலறி ஓடிய பெண்.. மத்திய பிரதேச கோர்ட் அதிரடி

Google Oneindia Tamil News

போபால்: நூதன வழக்கு ஒன்றிற்கு மத்திய பிரதேச கோர்ட் அதிரடி தீர்ப்பு தந்துள்ளது.. இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

எத்தனையோ தம்பதிகள் விவாகரத்து கேட்டு கோர்ட் வாசலை மிதிக்கிறார்கள்.. இதில் எத்தனையோ விதமான விநோத வழக்குகளும் உண்டு.

சில மாதங்களுக்கு முன்பு, மத்தியப் பிரதேசத்தில் ஒரு வழக்கு நடந்தது.. 2016ம் ஆண்டு ஒரு தம்பதிக்கு திருமணம் ஆகியுள்ளது... திருமணம் ஆனபின் இவர்களுக்குள் முதலிரவு நடக்கவில்லை.. கணவனிடம் இருந்து மனைவி ஏதாவது ஒரு சாக்கு சொல்லி ஒதுங்கியே இருந்தார்.

முதலிரவு.. ஆசையாய் நெருங்கிய கணவன்.. அலறி ஒரே ஓட்டம்.. சுப்ரீம் கோர்ட்டில் விநோத வழக்கு.. என்னாச்சுமுதலிரவு.. ஆசையாய் நெருங்கிய கணவன்.. அலறி ஒரே ஓட்டம்.. சுப்ரீம் கோர்ட்டில் விநோத வழக்கு.. என்னாச்சு

முதலிரவு

முதலிரவு

கடைசியில், உடல்நல பாதிப்பு இருப்பதாக சொல்லி மனைவி, அவர் அம்மா வீட்டிற்கே சென்றுவிட்டார்.. ஒருகட்டத்தில் மனைவியை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்தார் கணவர்.. முதலிரவும் ஏற்படானது.. அப்போதான், மனைவிக்கு ஆண்குறி போன்று இருப்பதை கண்டு அதிர்ந்து போனார் கணவர்.. அதனால், தனது மனைவி உண்மையில் ஒரு பெண்தானா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பிறகு, கணவர் தனது மனைவியை மெடிக்கல் செக்கப்புக்கு அழைத்துச் சென்றார்.. அங்கு அவருக்கு 'இம்பர்ஃபோரேட் ஹைமென்' எனப்படும் மருத்துவப் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டது...

 ஆண் உறுப்பு

ஆண் உறுப்பு

அதனால், அந்தப் பெண்ணுக்கு டாக்டர்கள் ஆபரேஷன் செய்தனர்.. ஆனாலும் கர்ப்பம் தரிப்பது சாத்தியமற்றது என்றும் சொல்லி விட்டனர்.. ஆனால், மனைவி தன்னை இதெல்லாம் சொல்லாமல் மறைத்து விட்டதாக கூறி, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 420இன் கீழ் வழக்கு தொடர்ந்தார்.. இந்த கேஸை மத்தியப் பிரதேச கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது... அதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட் போயுள்ளார் கணவர்... மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், மனுவிற்கு பதிலளிக்குமாறு மனைவிக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர். இதற்கு பிறகு இந்த வழக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை..

 நூதன கேஸ்

நூதன கேஸ்

இப்போதும் ஒரு நூதன வழக்கு வந்துள்ளது.. இதே மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. சுடியா என்ற பகுதியில், வசித்து வருபவர் திலக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 32 வயதாகிறது.. இவருக்கு கடந்த 2018 ஏப்ரல் 29ம் தேதி திருமணம் நடந்துள்ளது.. மனைவியை புனேவுக்கு அழைத்து சென்றார் திலக்.. பிறகு திடீரென அந்த பெண், இந்தூர் மகிளா போலீசில், தன்னுடைய கணவன், மாமியார், நாத்தனார் மீது புகார் கொடுத்தார்.. அந்த புகார் குறித்து அந்த பெண் சொன்னதாவது:

நெருங்கினேன்

நெருங்கினேன்

"திருமணம் ஆனதுமே என் கணவர் என்னிடம் வித்தியாசமாக நடந்து கொண்டார்.. முதலிரவும் எங்களுக்கு நடக்கவில்லை. நான் நெருங்கி போனாலும், என்னைவிட்டு ஒதுங்கியே இருந்தார்.. சில சமயம், ரூமுககுள் சென்று கதவை தாழிட்டு கொள்வார்.. அவர் மீது சந்தேகம் வரவும், நான் கண்காணிக்க ஆரம்பித்தேன்.. அப்போதுதான், அந்த தனியறையில் அவரை அந்த கோலத்தில் நான் பார்த்தேன்.. பெண் போல அலங்கரித்து காணப்பட்டார்..

ஹேர்பேண்ட்

ஹேர்பேண்ட்

ஹேர் பேண்ட், பொட்டு, கம்மல், லிப்ஸ்டிக் போன்ற மேக்கப்புகளுடன் இருந்தார். இதை நான் கவனித்துவிட்டது தெரிந்ததும், கணவரும் அவரது குடும்பத்தினர் என்னை சரமாரியாக தாக்கினர். என்னை புனேவில் இருந்து அழைத்து வந்து இந்தூரில் விட்டு சென்றனர்.. அதனால்தான் புகார் தந்தேன்.. மேலும், மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு ஆணையம், நீதிமன்றத்தில் ரகசிய அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது... அதில், குடும்ப வன்முறைக்கு நான் ஆளாக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருந்தது...

ஜீவனாம்சம்

ஜீவனாம்சம்

அதனடிப்படையில் மனுவை விசாரித்த கோர்ட், இப்போது எனக்கு மாதந்தோறும் 30 ஆயிரம் ரூபாய் தனக்கு வழங்க வேண்டும் என்று என் கணவருக்கு உத்தரவிட்டுள்ளது.. என் கணவரைப் போலவே இன்னும் சில பேர் இருக்கிறார்கள்.. இவர்கள் அனைவரும் பெண்களைப் போலவே டிரஸ் செய்து கொண்டு, மாலை நேரங்களில் ஒன்றாக சந்திப்பார்கள்.. அதுகுறித்த போட்டோவையும் கோர்ட்டில் சமர்ப்பித்தேன்.. அதற்கு பிறகே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

English summary
innovative case and my husband is putting on a makeup like women, says wife தம்பதியின் நூதன வழக்கில் மத்திய பிரதேச கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X