For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏமனில் சிக்கி மீண்ட இந்தியர்கள்... ஒரு "லைவ்" காட்சி!

Google Oneindia Tamil News

டெல்லி: ஏமன் உள்நாட்டுப் போரில் சிக்கிக் கொண்ட இந்தியர்களை இந்திய அரசு மீட்டு வருகிறது. இந்திய கடற்படை மூலமாக 350 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தியர்களை மீட்க ஐஎன்எஸ் சுமித்ரா என்ற போர்க் கப்பல் அனுப்பப்பட்டு இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.

இதுகுறித்த ஒரு புகைப்பட தொகுப்பு.

ஏடன் துறைமுகத்தில்

ஏடன் துறைமுகத்தில்

இது ஐஎன்எஸ் சுமித்ரா போர்க் கப்பலின் மேல்புறத் தோற்றம். இந்தியர்கள் கப்பலில் ஏறியுள்ளனர். ஏடன் துறைமுகத்தில் கப்பல் நிற்கிறது.

கப்பலின் மேல்

கப்பலின் மேல்

போர்க் கப்பலில் ஏறியுள்ள இந்தியர்கள் கப்பல் புறப்படுவதற்காக காத்துள்ளனர். முதலில் இந்தக் கப்பலை பாதுகாப்புக்கு அனுப்பத்தான் நினைத்திருந்தனர். கடைசியில் இதிலேயே கூட்டி வந்து விட்டனர்.

ஐஎன்எஸ் சுமித்ரா

ஐஎன்எஸ் சுமித்ரா

இதுதான் இந்தியாவின் ஐஎன்எஸ் சுமித்ரா. பாதுகாப்புடன் துறைமுகத்தில் நின்று கொண்டிருக்கிறது. பலத்த பாதுகாப்புடன் ஏடன் துறைமுகம் வந்த சுமித்ரா கப்பல் முதல் கட்டமாக 350 பேரை மீட்டுள்ளது.

காத்திருக்கும் கூட்டம்

காத்திருக்கும் கூட்டம்

உள்நாட்டுப் போரில் சிக்கி தாயகம் திரும்புவதற்காக, கப்பலில் ஏறுவதற்காக இந்தியர்கள் ஆவலுடன் காத்துள்ள காட்சி.

ஆவணச் சோதனை

ஆவணச் சோதனை

தாயகம் திரும்பக் காத்துள்ள இந்தியர்களின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் பரிசோதிக்கப்படுகின்றன.

தாயகத்திற்குக் கிளம்பும் இந்தியர்கள்

தாயகத்திற்குக் கிளம்பும் இந்தியர்கள்

பதட்டமான சூழலிலிருந்து விடுபட்டு இந்தியாவுக்குத் திரும்புவதற்காக கப்பலில் ஏறும் பயணிகள். மீட்கப்பட்ட இந்தியர்கள் விமானம் மூலம் இந்தியா வரவுள்ளனர்.

இதுவரை 350 பேர் மீட்பு

இதுவரை 350 பேர் மீட்பு

இதுவரை ஏமனிலிருந்து 350 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 4000 பேர் வரை வசிப்பதாக தெரிகிறது. அனைவரும் மீட்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

விமானங்களும் தயார்

விமானங்களும் தயார்

கப்பல் தவிர இரண்டு பெரிய சரக்கு விமானங்களையும் இந்திய அரசு தயார் நிலையில் வைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

English summary
India's INS Sumithra has rescued 350 Indians from Yemen.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X