For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆன்லைனில் ஆளெடுக்கும் ராணுவம்- முதல் முறையாக கர்நாடகா, கேரளாவில் தொடக்கம்

Google Oneindia Tamil News

பெங்களூரு: இந்திய ராணுவத்தின் பெங்களூரு கிளை ஆளெடுப்புப் பிரிவானது, ஆன்லைன் மூலம் ராணுவத்திற்கான ஆளெடுப்பை நடத்தவுள்ளது. மிகப் பெரிய அளவிலான இந்த ஆளெடுப்பானது கர்நாடகம் மற்றும் கேரள அளவில் நடைபெறும்.

பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நவீன ஆளெடுப்புப் பணியை இந்திய ராணுவம் மேற்கொள்ளவுள்ளது.

Inspired by PM’s vision, Army warms up for digital recruitment drive

இதுகுறித்து பொது ஆளெடுப்பு பிரிவு துணை இக்குநர் பிரிகேடியர் வி.ராஜாமணி கூறுகையில், "ஜூனியர் கமிசனிஸ்ட் ஆபிசர்ஸ் பொறுப்பு முதல் மற்ற பிற பிரிவுளுக்கான பணிகளுக்கு ஆன்லைன் மூலம் ஆளெடுக்கப்படவுள்ளது.

இதில் கலந்து கொள்ள விரும்புவோர் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஓபன் ரெக்ரூட்மென்ட் ரேலி என்ற முறையில் இந்த ஆளெடுப்பை நடத்தவுள்ளோம். ஆன்லைனில் அப்ளை செய்யும் விண்ணப்பாதரர்கள் சார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு பின்னர் ரெகுலர் லேரிக்கு கூப்பிடப்படுவார்கள்" என்றார்.

மேலும் ராஜாமணி கூறுகையில், "வேலைக்கு ஆளெடுக்கும் பணிகள் ஒளிவுமறைவில்லாமல் நடைபெறும். இதில் முறைகேடுக்கே இடமில்லை. பொதுமக்கள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாந்து விடக் கூடாது. மேலும் ஆளெடுப்புக்கு வரும் இளைஞர் கூட்டத்தை சிறந்த முறையில் சமாளிக்கவும் தற்போது ஏற்பாடுகள் செய்துள்ளோம். எனவே கூட்ட நெரிசல் ஏற்படாது. கர்நாடகத்தைப் பொறுத்தவரை வட கர்நாடகத்திலிருந்து அதிகம் பேர் ராணுவத்தில் சேருகிறார்கள். கேரளாவிலும் கூட ஆர்வம் அதிகமாக உள்ளது" என்றார் அவர்.

2016 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் இந்திய ராணுவம் தனது ஆளெடுப்பை அவுட்சோர்ஸ் செய்யவுள்ளது. அந்த வேலையை செய்ய் போகும் நிறுவனம் யார் என்பது குறித்த இறுதிக்கட்ட பரிசீலனையில் அது உள்ளது.

தற்போது நடத்தப்படவுள்ள ஆளெடுப்பானது 17 வயது முதல் 23 வயதுக்கோருக்கானது. குறைந்தபட்ச கல்வித்தகுதியானது 12 ஆம் வகுப்பு தேர்ச்சியாகும். பொது பிரிவில் படைவீரர்கள், டெக்னீஷியன்கள், ஸ்டோர் கீப்பர்கள் பணிக்கு ஆளெடுக்கப்படும். இரு மாநிலங்களிலிருதும் 2000 வீரர்கள் தேர்வு செய்யப்படவுல்ளனர்.

ஆன்லைனில் விண்ணப்பிப்போர் தங்களது கல்வித் தகுதி குறித்த சான்றிதழ்களின் நகல்கள், நிரப்பப்பட்ட தகவல்கள், நிரந்தர இருப்பிடம், பின் கோடு, இமெயில் ஐடி, மொபைல் போன் எண், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்ளிட்டவற்றையும் இணைக்க வேண்டும்.

மேலும் மத்திய, மாநில அரசுகளின் மையங்களையும் தங்களது விண்ணப்பத்தை அனுப்ப பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரேலி 1: அக்டோபர் 6 முதல் 13; இடம்:ஹவேரி (கர்நாடகா)

விண்ணப்ப தேதி: ஆகஸ்ட் 6

விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 22

ரேலி 2: அக்டோபர் 31 முதல் நவம்பர் 5; இடம்: மலப்புரம் (கேரளா)
விண்ணப்ப தேதி: ஆகஸ்ட் 28
விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 14

ரேலி 3: டிசம்பர் 10 முதல் 15; இடம்: கோட்டயம் (கேரளா)
விண்ணப்ப தேதி: அக்டோபர் 19
விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 14

ரேலி 4: ஜனவரி 6 முதல் 6; இடம்: பீதர் கர்நாடகா)
விண்ணப்ப தேதி: நவம்பர் 6
விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 23

ரேலி 5: பிப்ரவரி 1 முதல் 4; இடம்: பெல்லாரி (கர்நாடகா)
விண்ணப்ப தேதி: டிசம்பர் 1
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 18

English summary
The Indian Army's Head Quarter (HQ) Recruiting Zone, Bengaluru,is warming up to launch a massive online recruitment drive targeting the youth of Karnataka and Kerala. The new recruitment drive is in tune with Prime Minister Narendra Modi's recently-launched ‘Digital India' initiative.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X