For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிபாவிற்கு எதிராக சிறந்த செயல்பாடு.. கேரளாவிற்கு அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் பாராட்டு

நிபா வைரஸ் பரவலுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டதற்காக கேரள அரசுக்கு, அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: நிபா வைரஸ் பரவலுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டதற்காக கேரள அரசுக்கு, அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

கேரளாவில் பரவி வந்த நிபா வைரஸ் காரணமாக, மொத்தமாக 13 பேர் இறந்து இருக்கிறார்கள். இதை கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவர்கள் கஷ்டப்பட்டு வந்தனர்.ஆனால் வைரஸ் இன்னும் கேரளாவை தவிர வேறு மாநிலங்களில் பரவவில்லை.

Institute of Human Virology gives an award to Kerala for its action against Nipah

இதற்கு எதிராக இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.நிபா வைரஸ் வெவ்வால்கள் மூலம் பரவும் நோயாகும். வௌவால்கள் இந்த வைரஸ் தாக்கிய பின் பழங்களில் அமர்வதால் பரவுகிறது. வெவ்வால்கள் தாக்கிய பழங்கள் மூலம் இந்த நோய் பரவுகிறது.

இதனால் பழங்களை மிகுந்த கவனத்துடன் வாங்க வேண்டும் என்று அறிவுத்தப்பட்டுள்ளது. விலங்குகள் மூலம் பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.இதனால் அம்மாநில அரசு இதற்கு எதிராக துரிதமாக செயல்பட்டது.

பெரிய அளவில் சுகாதர பணிகளை முடுக்கிவிட்டு அதற்காக தனி பணியாளர்களை நியமித்தது. இந்த நிலையில் தற்போது அதற்கான பலனாக அங்கு 90 சதவிகித வைரஸ் பாதிப்பு கட்டுபடுத்தப்பட்டுள்ளது.

Institute of Human Virology gives an award to Kerala for its action against Nipah

இந்த நிலையில் நிபா வைரஸ் பரவலுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டதற்காக கேரள அரசுக்கு, அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் விருது வழங்கி சிறப்பித்துள்ளது. அமெரிக்காவின் பால்டிமோரில் உள்ள இன்ஸ்டியூட் பார் ஹியூமன் வைரலாகி கேரளா அரசுக்கு இந்த பரிசை வழங்கி சிறப்பித்துள்ளது.

இதை எப்படி கட்டுப்படுத்தினார்கள் என்று கேரளா அரசிடம் ஆலோசனை கேட்கவும் அந்த நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. அதேபோல் கேரளாவில் இதற்காக ஆராய்ச்சி மையம் துவங்கவும் முன்வந்துள்ளது. இந்த ஆராய்ச்சி மையத்தில் நிறைய தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்தியாவில் தனியாக ஒரு மாநிலத்தை இந்த நிறுவனம் பாராட்டுவது இதுவே முதல்முறை.

English summary
The Institute of Human Virology in Baltimore gives an award to Kerala government for its action against Nipah virus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X