For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒருவாரமாக ஓயவில்லை.. மே.வங்கத்தில் மாணவர்கள், அரசியல் கட்சிகள் அலைஅலையாக போராட்டங்கள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    குடியுரிமை சட்டத்தில் திருத்தத்திற்கு எதிராக கொந்தளித்த கங்குலியின் மகள்

    கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக அலை அலையாக போராட்டங்கள் தொடருகின்றன. தலைநகரம் கொல்கத்தாவின் திசையெங்கும் நோ சிஏபி- நோ என்ஆர்சி முழக்கங்கள் விண்ணை பிளக்கின்றன.

    குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக அஸ்ஸாம், திரிபுரா என வடகிழக்கு மாநிலங்களில் பற்றி எரிந்த போராட்டம் மேற்கு வங்கத்திலும் பரவியது. பின்னர் வட இந்தியா, தென்னிந்தியா என தேசம் முழுவதும் இப்போராட்டம் பெருநெருப்பாக பிரவாகம் எடுத்திருக்கிறது.

    Intensify Protests in West Bengal against CAA

    மேற்கு வங்கத்தில் முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான அரசு, மத்திய அரசுக்கு எதிராக நேரடியாக களத்தில் இறங்கியிருக்கிறது. கொல்கத்தாவில் 3 பிரமாண்ட பேரணிகளை முதல்வர் மமதா பானர்ஜி நடத்தியுள்ளார்.

    கொல்கத்தாவில் இன்று காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், 17 இடதுசாரி கட்சிகளின் கூட்டமைப்பு ஆகியவை தனித்தனியே போராட்டங்களை முன்னெடுத்தன. குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பாஜகவும் போராட்டம் நடத்தியது.

    மேற்கு வங்கத்தின் மாவட்டங்களிலும் இப்போராட்டம் உக்கிரமடைந்துள்ளது. மேற்கு வங்கத்தில் ஒரு வார காலமாக இடைவிடாமல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    English summary
    In West bengal, TMC, Congress, Left front and Students Movements hold protests against the Centre's CAA.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X