For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுதந்திர தினத்தில் பிரதமர்கள் உரையாற்றும் ஷாஜகானின் செங்கோட்டை!!

சுதந்திர தினத்தில் பிரதமர்கள் உரையாற்றும் செங்கோட்டையின் சிறப்புகள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரதமர்கள் உரையாற்றும் ஷாஜகானின் செங்கோட்டை-வீடியோ

    டெல்லி: சுதந்திர தினத்தில் பிரதமர்கள் உரையாற்றும் செங்கோட்டை பல்வேறு சிறப்புகளுக்கு பெயர் பெற்றது.

    ஒவ்வொரு சுதந்திர தினத்தின் போதும் நாட்டின் பிரதமர்கள் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் உரையாற்றுவது வழக்கம். இந்நிலையில் இந்த செங்கோட்டை குறித்த சில சிறப்புகள் உங்களின் பார்வைக்கு..

    Interesting information on Delhi historic icon Red fort

    தாஜ்மகாலை கட்டிய முகலாய சக்கரவர்த்தி ஷாஜகான் கட்டியதுதான் இந்த செங்கோட்டை. ஆக்ராவிலிருந்து டெல்லிக்கு முகலாய மன்னர்கள் தலைநகரை மாற்றியபோது இந்த செங்கோட்டை கட்டப்பட்டது.

    செங்கோட்டையை கட்டி முடிக்க 10 வருடம் ஆனது. 2 பேரால் கட்ட ஆரம்பித்த இது பின்னர் 10 வருட காலமாக கட்டுமானப் பணிகளுக்கு ஆனது.
    1638ல் கட்ட ஆரம்பித்து 1648ல் முடித்தனர். செங்கோட்டை முதலில் வெள்ளை நிறத்தில்தான் இருந்தது. கட்டடத்தின் பெரும்பாலான பகுதிகள் சுண்ணாம்புக் கலவையால் கட்டப்பட்டது.

    Interesting information on Delhi historic icon Red fort

    பின்னர் இந்த கட்டுமானம் காலப் போக்கில் உதிர்ந்த போது, வெள்ளையர்கள் காலத்தில்தான் இதற்கு சிவப்பு நிறம் பூசப்பட்டது. சுவர்களும் செங்கற்களும் சிவப்பாக இருந்ததால் இதை வெள்ளையர்கள் செங்கோட்டை என அழைக்கலாயினர்.

    செங்கோட்டையில் ஒரு காலத்தில் கோஹினூர் வைரம் அலங்கரித்தது குறிப்பிடத்தக்கது. செங்கோட்டையின் முக்கிய வாயில் லாகூர் கேட் என அழைக்கப்படுகிறது. காரணம் இந்த வாசலானது லாகூர் நகரை நோக்கி இருப்பதால் லாகூர் கேட் என்று அழைத்தனர். அப்போது லாகூர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக திகழ்ந்தது வரலாறு.

    2007ல் இது யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. சுதந்திர தினத்தின்போது பிரதமர்கள் இங்கு உரையாற்றுவது வழக்கம் ஆகும். நேரு காலத்திலிருந்து இது தொடர்கிறது.

    English summary
    Redfort is a historic icon of Delhi. Red fort is build by Mughal emperor Shah Jahan in 1639.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X