For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதம் மாறி காதல் திருமணம் செய்த ஜோடியை துன்புறுத்திய இந்து குழுவினர்.. போலீஸ் செய்த காரியம்!

Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்த முஸ்லிம் இளைஞர் மற்றும் இந்து பெண்ணை இந்து தர்மசேனா குழுவினர் பிடித்து துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் 20 வயது நிரம்பாத முஸ்லிம் ஆணும், 18 வயது முஸ்லிம் பெண்ணும் பெற்றாருக்கு தெரியாமல் செய்து கொண்ட திருமணத்தை பதிவு செய்ய விண்ணப்பிக்க வந்திருக்கிறார்கள். இவர்களை இந்து தர்மசேனாவைச் சேர்ந்த இரண்டு பேர் துன்புறுத்தியாக புகார் எழுந்துள்ளது.

Interfaith couple ‘harassed’ by Hindu vigilante groups in MP, police send girl to parents

ஜபல்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் அந்த பெண் கூறுகையில் என் விருப்படியே நான் திருமணம் செய்து கொண்டேன். அவர் ஒரு முஸ்லீம் என்று எனக்குத் தெரியும். நான் அவரை நேசிக்கிறேன், விருப்பத்துடன் அவரை திருமணம் செய்தேன். எனக்கு 18 வயது நிறைவடைந்து விட்டது. இன்னும் 3 மாதத்தில் 19 வயதாகிவிடும். என் திருமணம் பற்றி எனது குடும்பத்தினருக்கு தெரியாது என்றார்.

இதனிடையே இந்து தர்மசேனா குழுவினர் முஸ்லிம் இளைஞரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து சிஆர்பிசி பிரிவு 151 ன் கீழ் காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். இளம் பெண்ணை பெற்றோருடன் செல்லுமாறு கூறினார்கள். அதேநேரம் சில மணி நேரம் கழித்து முஸ்லிம் இளைஞரை போலீசார் ஜாமீனில் விடுவித்தனர்.

English summary
An interfaith-couple seeking to register their marriage in Jabalpur, Madhya Pradesh, was allegedly harassed by members of two Hindu groups Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X