For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகளிர் தினத்தன்று 'ஹார்லி டேவிட்சன்' பைக்கில் அசால்டாக மக்களவைக்கு வந்த பெண் எம்.பி !

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி. ரஞ்ஜீத் ரஞ்சன் பாராளுமன்றத்திற்கு ஹார்லி டேவிட்சன் பைக்கில் வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

பீகார் மாநிலம் சுபால் மக்களவைத் தொகுதியிலிருந்து காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரஞ்சித் ராஜன் (42). இரு குழந்தைகளின் தாயான ரஞ்சித் 'ஹார்லி-டேவிட்சன்' நிறுவனத்தின் பைக்கில் பாராளுமன்றம் வந்து இறங்கினார். பொதுவாக மக்களவைக்கு காரில் வரும் எம்.பிக்கள் தங்களது வாகனத்தைக்கூட பார்க்கிங்கில் நிறுத்த மாட்டார்கள்.

International Women's Day:Lady MP Rides on Motor bike(Harley Davidson) to Parliament

அப்படியிருக்க காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி ரஞ்சீத் ரஞ்சன் இன்று தனது ஹார்லி டேவிட்சன் பைக்கை அவராகவே ஓட்டி வந்து பார்க்கிங் செய்தது அனைவரையும் வெகுவாக ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதுமட்டுமல்லாமல் பாராளுமன்ற வளாகத்தை சுற்றி தனது பைக்கில் ஒரு ரவுண்ட் வந்தார்.

இதுகுறித்து செய்தியாளரை பேசிய ரஞ்சீத், என்னுடைய சொந்த வருமானத்தில் அந்த பைக்கை வாங்கினேன். என்னுடைய கணவரைக் கூட பைக்கை தொட விடமாட்டேன். இதுவரை நான் செய்த அனைத்து விஷயங்களுக்கும் என்னுடைய பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்ததில்லை என்று கூறினார்.

இவரின் கணவர் பப்பு யாதவும் ஒரு எம்.பி ஆவார், இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் பைக்குகளின் ஆரம்ப விலையே 4.50 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Congress MP Ranjit Rajan rode a motorcycle to Parliament House.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X