• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Breaking News: விஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் சர்கார்- தீபாவளியன்று ரிலீஸ்

By Shyamsundar
|

சென்னை: விஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் சர்கார். இது தீபாவளியன்று திரைக்கு வருகிறது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவாகும் விஜய்யின் 62-வது திரைப்படம் சர்கார். இத்திரைப்படம் தீபாவளியன்று திரைக்கு வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் சர்கார் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியிடப்பட்டது.

இன்றைய லைவ் அப்டேட்டுகளை இப்பகுதியில் படிக்கலாம்:

Newest First Oldest First
8:02 PM, 21 Jun
பொருளாதாரத்தை சீர்படுத்தியுள்ளோம்- மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சு

யுகே-இந்தியா வாரம் நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சில் பியூஷ் கோயல் பேச்சு

அடுத்த 30 வருடங்களுக்கான அடித்தளத்தை இந்த ஆட்சி உருவாக்கியுள்ளது

இந்திய பொருளாதாரத்தை ஒழுங்கிற்குள் கொண்டுவந்துள்ளோம்-பியூஷ் கோயல்

6:19 PM, 21 Jun
பொன்.ராதா மக்களிடம் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்: முத்தரசன் குற்றச்சாட்டு

பொன்.ராதாகிருஷ்ணா? பொய்.ராதாகிருஷ்ணா? என மக்கள் கேள்வி: முத்தரசன்

கருத்து கூறினாலே சமூக விரோதிகள் என்றால் நாங்களும் சமூக விரோதிகளே: முத்தரசன்

எட்டு வழி சாலையை கண்டித்து ஜூலை 4-ம் தேதி சேலத்தில் ஆர்ப்பாட்டம்: முத்தரசன் அறிவிப்பு

6:13 PM, 21 Jun
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் சர்கார்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகிறது சர்கார்

தீபாவளியன்று விஜய் நடிக்கும் சர்கார் திரைக்கு வருகிறது

5:56 PM, 21 Jun
மரக்காணம் அருகே வேளாங்கண்ணி என்பவர் குடிசை எரிப்பு

வீட்டை கொளுத்தியவர்களை கைது செய்யக் கோரி ஈசிஆர் சாலையில் மறியல் v
அரை மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்று வரும் மறியலால் 4 கி.மீ. தூரத்துக்கு போக்குவரத்து பாதிப்பு

5:10 PM, 21 Jun
டாஸ்மாக் வாகனத்திற்கு தீ வைத்த வழக்கில் வேல்முருகன் முன்ஜாமீன் கோரி மனு

சுங்கச்சாவடி வழக்கில் சிறையில் இருந்ததால் தீ வைப்பு சம்பவத்தில் தொடர்பில்லை - வேல்முருகன்

4:36 PM, 21 Jun
வழக்கறிஞர்கள் நீதித்துறையை விமர்சிப்பது நீதித்துறையை தற்கொலைக்கு தள்ளுவது போன்றது

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் தீர்ப்பை விமர்சிப்பது குறித்து நீதிபதி கிருபாகரன்

சூர்யபிரகாசத்தின் முறையீட்டை தலைமைநீதிபதியின் கவனத்துக்கு கொண்டுசெல்கிறேன் - கிருபாகரன்

தீர்ப்பை விமர்சித்த தங்க தமிழ்ச்செல்வன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முறையீடு

4:36 PM, 21 Jun
காவிரி ஆணையத்திற்காக காத்திருக்க முடியாது - கர்நாடக முதல்வர் குமாரசாமி

தமிழகத்திற்கு போதுமான நீரை திறந்து விட்டுள்ளோம் -குமாரசாமி

கர்நாடக விவசாயிகளுக்குத் தேவையான நீரை திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன் -குமாரசாமி

4:32 PM, 21 Jun
8 வழி சாலைக்கு எதிர்ப்பு- தருமபுரி அருகே 4 குடும்பங்கள் தீக்குளிக்க முயற்சி

பாப்பம்படி குமரேசன் கட்டிய புதிய வீட்டின் நடுவே சாலைக்கு நிலம் அளந்ததால் அதிர்ச்சி

குமரேசன், மனைவி வேடியம்மாள், மகன் சுஜித் தீக்குளிக்க முயற்சி

இருளப்பட்டியில் 3 குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தீக்குளிக்க முயற்சி

3:06 PM, 21 Jun
ஜெ. மரணம்- ஆறுமுகசாமி கமிஷன் காலக்கெடு 4 மாதம் நீடிப்பு

2:52 PM, 21 Jun
ஆறுமுகசாமி ஆணையத்துக்கு 4 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது

ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 4 மாதம் நீட்டிப்பு

2-ஆவது முறையாக ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு

2:25 PM, 21 Jun
ராஜீவ் வழக்கு: 7 தமிழரை விடுவிக்க கூடாது- தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்
1:39 PM, 21 Jun
நடிகை நிலானிக்கு 15 நாள் போலீஸ் காவல் - சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
1:18 PM, 21 Jun
கமல் யாரை வேண்டுமானாலும் சந்திக்கட்டும்- அமைச்சர் ஜெயக்குமார்

அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் ஆகியோரையும் சந்திக்கட்டும்

தமிழகத்தில் பலம் வாய்ந்த கட்சியாக அதிமுக உள்ளது- அமைச்சர் ஜெயக்குமார்

1:04 PM, 21 Jun
தருமபுரி- ஓசூர் 4 வழி சாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு

நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து 21 கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

12:12 PM, 21 Jun
சேலம் ராமலிங்கபுரம் மாரியம்மன் கோவிலை அகற்ற எதிர்ப்பு
12:11 PM, 21 Jun
சேலம் ராமலிங்கபுரத்தில் பரபரப்பு

கோவிலை அகற்ற பக்தர்கள் எதிர்ப்பு

கோயிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பக்தர் சாமியாடியதால் பரபரப்பு

12:11 PM, 21 Jun
திருவள்ளூர் ஆசிரியர் பகவானின் பணியிட மாற்றம் நிறுத்தி வைப்பு

ஆசிரியர் பகவானின் மாற்றத்தால் மாணவிகள் கதறி அழுதனர்

மாணவர்கள் கோரிக்கையை ஏற்று பகவான் பணியிட மாற்றம் நிறுத்தம்

12:05 PM, 21 Jun
வெப்பச்சலனம்- தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழை

கோவை சின்னக்கல்லாறில் 5 செ.மீ மழை பதிவு

11:27 AM, 21 Jun
காவிரி ஆணைய உறுப்பினர்கள் நியமனம் குறித்து குமாரசாமியிடம் பேசுவேன் - கமல்
11:27 AM, 21 Jun
சமூக ஆர்வலர் மட்டுமின்றி வழக்கறிஞரையும் கைது செய்வதா?- கமல்ஹாசன்
11:26 AM, 21 Jun
ஜனநாயகத்துக்கு ஆபத்து, நிலவும் நிலவரம் குறித்து பேசினேன் - கமல்

தேர்தல் குறித்து இப்போது பேசவில்லை- பின்னர் ஒருவேளை பேசலாம்- கமல்

11:26 AM, 21 Jun
டெல்லியில் கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு

சோனியாவை சந்தித்த பின் கமல் பேட்டி

மரியாதை நிமித்தமாக சோனியாவை சந்தித்தேன் - கமல்

தமிழக அரசியல் சூழல், அவலம் குறித்து பேசினேன்

11:26 AM, 21 Jun
தூத்துக்குடியில் வன்முறையை தூண்டியதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைது

மதுரையை சேர்ந்த வாஞ்சிநாதன் சென்னை விமான நிலையத்தில் கைது

தூத்துக்குடி மக்கள் போராட்டத்துக்கு சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைது

11:14 AM, 21 Jun
தூத்துக்குடியில் 1720 பேர் மீதான வழக்குகள் ரத்து

பிருந்தாகாரத் கூட்டத்தில் விதிமீறி பங்கேற்றதாக 1720 பேர் மீது வழக்கு

1720 பேர் மீதான வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட் மதுரை கிளை

10:47 AM, 21 Jun
சோனியா காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு

டெல்லியில் சோனியாவை சந்தித்தார் கமல்

10:27 AM, 21 Jun
தஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காததற்கு எதிர்ப்பு

போராட்டம் நடத்தப் போவதாக பொதுமக்கள் அறிவிப்பு

தஞ்சை செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என எதிர்பார்ப்பு

9:17 AM, 21 Jun
யோகா மக்கள் இயக்கமாக வேண்டும் - குடியரசு துணை தலைவர்
9:05 AM, 21 Jun
பாபா ராம்தேவ் தலைமையில் நடந்த யோகா பயிற்சியில் கின்னஸ் சாதனை

ஒரே இடத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் யோகா செய்து கின்னஸ் சாதனை

ராஜஸ்தான் கோட்டா பகுதியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் யோகா செய்து சாதனை

8:29 AM, 21 Jun
காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகராகிறார் விஜயகுமார் ஐ.பி.எஸ்

ஆளுநர் வோராவின் ஆலோசகராக ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி விஜயகுமார் நியமனம்

காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது

ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி விஜயகுமார் தமிழகத்தை சேர்ந்தவர்

8:10 AM, 21 Jun
பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

6 ஆண்டுகளாக உரிய நேரத்தில் கர்நாடகா தமிழகத்திற்கு நீரை திறந்துவிடவில்லை - முதல்வர்

காவிரி பங்கீடு தொடர்பான கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்

காவிரி ஆணையத்தை கர்நாடக முடக்க பார்க்கிறது

மத்திய அரசும், பிரதமரும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதல்வர்

READ MORE

English summary
International Yoga Day: Modi wishes people for good health. He participates in Yoga day celebration in Dehradun.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X