For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ.11.85 லட்சம் கோடி பழைய நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட்: ரிசர்வ் வங்கி

மத்திய அரசின் அறிவிப்புக்கு பிறகு 11.85 லட்சம் கோடி பழைய ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

மும்பை: மத்திய அரசின் அறிவிப்புக்கு பிறகு இதுவரை 11.85 லட்சம் கோடி பழைய ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டுள்ளது

கடந்த நவம்பர் 8ம் தேதியன்று அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அடுத்து பொதுமக்களால் வங்கிகளில் செலுத்தப்பட்ட ரூபாய் நோட்டுகளின் மதிப்பு எவ்வளவு என்ற விபரத்தை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.மாதத்திற்கு இருமுறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை பரிசீலனைக் கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது.

Invalid Rupee Notes paid in banks know How Much?

அந்தக் கூட்டத்தில் வங்கிகளுக்கான வட்டி விகிதம் 6.5 சதவீதமாக மாற்றம் இல்லாமல் அப்படியே நீடிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. அதேவேளையில் உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பு உத்தேசமானது 7.6 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ஆர்.காந்தி, பண மதிப்பு நீக்க நடவடிக்கைகயை அடுத்து இதுவரை 11.85 லட்சம் கோடி பழைய ரூபாய் நோட்டுகள் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளன' என்ற தகவலைக் கூறினார்.

English summary
Mumbai: Invalid Rupee Notes paid in banks know How Much? RBI Deputy governor disclose the amount while met with reporters here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X