For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹெல்மெட் போடல.. ஃபைனும் கட்டல.. போலீசும் பிடிக்கல.. இதெப்படி இருக்கு.. வைரலாகும் கலகல வீடியோ!

Google Oneindia Tamil News

Recommended Video

    ஹெல்மெட் போடல.. ஃபைனும் கட்டல.. போலீசும் பிடிக்கல.. இதெப்படி இருக்கு.. வைரலாகும் கலகல வீடியோ!

    சென்னை: ஹெல்மெட்டும் போடல.. ஃபைனும் கட்டல.. ஆனாலும் டிராபிக் போலீஸ் வாகன ஓட்டிகளை பிடிக்கல.. எப்படி?

    ஹெல்மெட் போடுங்க.. ஹெல்மெட் போடுங்க..என்று தமிழகம் முழுவதும் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். இதற்காக எத்தனையோ வகைகளில், எத்தனையோ தினுசாக சொல்லி சொல்லி பார்க்கிறார்கள்.. அப்படியும் சிலர் ஹெல்மெட் போடாமல்தான் வண்டி ஓட்டி வருகிறார்கள்.

    சிலர் வண்டியில் ஹெல்மெட் இருந்தாலும் அதை எடுத்து தலையில் மாட்டுவது இல்லை. போலீசார் தூரத்தில் தெரிந்தால் எடுத்து டக்கென எடுத்து மாட்டி கொள்கிறார்கள். அதையும் மீறி சிக்குபவர்களுக்கு போலீசார் ஸ்பாட்டிலேயே பைன் போடுகிறார்கள்.

    சிதம்பரம் கைதானதுமே மத்திய அரசிடம் பணிந்துவிட்ட ஸ்டாலின்.. ஆதாரம் இதோ.. ஜெயக்குமார் பரபரப்பு பேட்டிசிதம்பரம் கைதானதுமே மத்திய அரசிடம் பணிந்துவிட்ட ஸ்டாலின்.. ஆதாரம் இதோ.. ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி

    ஃபைன்

    ஃபைன்

    இப்போது வாகன சட்டம் கடுமையாகி அமலில் உள்ளது.. அதனால் உயிருக்கு பயப்படுகிறார்களோ இல்லையோ, ஃபைன் கட்ட வேண்டி வருமே என்றே பலர் ஹெல்மட் போட்டு கொள்கிறார்கள். இதில் ஒரு சிலர் விதிவிலக்கு! இவர்கள் ஹெல்மட்டும் போடுவதில்லை, ஃபைன் கட்டுவதும் இல்லை.. எப்படி தெரியுமா?

    சோதனை

    இதைதான் பங்கஜ் நாயன் என்ற ஐபிஎஸ் அதிகாரி ஒரு வீடியோவை ட்விட்டரில் போட்டு நமக்கு தெரிவித்துள்ளார். எந்த ஊர் ரோடு என தெரியவில்லை. வாகனங்கள் பல சென்று கொண்டிருக்கிறது. டிராபிக் போலீசார், யார் யார் ஹெல்மட் போடவில்லை என்பதை கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக் கொண்டு கண்காணிக்கிறார்கள்.

    போலீஸ்

    போலீஸ்

    அப்போது வரிசையாக சிலர் பைக்கை தள்ளிக் கொண்டு போலீஸை கடந்து போகிறார்கள். அவர்கள் யார் தலையிலும் ஹெல்மெட் இல்லை. வண்டியை ஓட்டிவந்தவர்கள், சிக்னலில் இறங்கி கொண்டார்கள் போல தெரிகிறது.

    படு காமெடி

    படு காமெடி

    "ஹெல்மெட் இல்லாமல் வண்டியை ஓட்டினால்தானே பிடிப்பீங்க.. இப்படி தள்ளிட்டு போனா என்ன செய்ய முடியும்" என்ற தோரணையில் அவர்கள் டிராபிக் போலீஸை கடக்கிறார்கள். இதனால் அவர்களை எதுவுமே செய்ய முடியாமலும், கேட்க முடியாமலும் போலீசாரும் விழிக்கிறார்கள். இப்படி ஒரு டெக்னிக்கைதான் வீடியோவாக போட்டு படு காமெடியா இருக்கே என்று ஐபிஎஸ் அதிகாரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    முக்கியம்... முக்கியம்

    முக்கியம்... முக்கியம்

    அது சரி.. எவ்வளவு தூரத்துக்கு இப்படியே தள்ளிட்டு போவாங்க.. ஓட்டித்தானே ஆகணும்.. விபத்துன்னு வந்தால் அதையும் சந்தித்துதானே ஆகணும்.. இதையெல்லாம் சிரிச்சிட்டு கடந்து போய்டாதீங்க மக்களே.. உங்கள் உயிர் உங்க கையில்.. ஹெல்மட் அணிவது நல்லது.. இதை எப்போதுமே மனதில் வச்சுக்கங்க.

    English summary
    IPS Officer Pankaj Nain insists Helmet awareness Video and this video goes viral on socials now
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X