For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேன்சர் நம்ம உடம்பில் இல்லைங்க.. நம்ம வீட்டில் உள்ள மருந்துகளில்தான் மறைந்திருக்கிறது!

Google Oneindia Tamil News

டெல்லி: புற்றுநோய் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உடல் பருமன் இருந்தாலும் கேன்சர் வருகிறது. வேறு காரணங்களாலும் வருகிறது. ஆனால் புற்று நோயை நாம்தான் தேடிப் போவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் மருந்துகள் முதல் பூச்சிமருந்துகள் வரை பல தரப்பட்ட வேதிப் பொருட்களால்தான் அதிக அளவில் புற்று நோய் பரவுவதாக அதிர வைக்கும் ஒரு ஆய்வுத் தகவல் கூறுகிறது.

மிக மிகச் சிறிய அளவிலான வேதிப் பொருளாக இருந்தாலும் கூட அது புற்றுநோய்க்கு வழி வகுத்து விடுகிறதாம்.

ஆய்வு முடிவு...

ஆய்வு முடிவு...

28 நாடுகளைச் சேர்ந்த 174 விஞ்ஞானிகள் சேர்ந்து செய்த ஆய்வின் முடிவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக் குழுவில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.

வேதிப்பொருட்கள்...

வேதிப்பொருட்கள்...

அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் வேதிப் பொருட்களை இவர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். இவை நமது உடலில் ஏற்படுத்தும் தாக்கத்தை இக்குழு ஆய்வு செய்து முடிவை வெளியிட்டு்ளது.

புற்றுநோய் காரணிகள்...

புற்றுநோய் காரணிகள்...

மொத்தம் 85 வகையான வேதிப் பொருட்கள் ஆய்வுக்கு எடுகக்கப்பட்டன. அதில் புற்றுநோயை ஏற்படுத்தும் 11 வகை முக்கிய அம்சங்கள் இருப்பது தெரிய வந்துள்ளதாம். இதில் 50 வகையான வேதிப் பொருட்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகள் மிகக் குறைந்த அளவில் இருப்பது தெரிய வந்துள்ளது.

74 சதவீதம்...

74 சதவீதம்...

13 வகையான வேதிப் பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் விளைவுகளை தூண்டி விடுவதாக கண்டறியப்பட்டுள்ளது. மொத்தமாக சேர்த்து இந்த வேதிப் பொருட்களால் 74 சதவீத அளவுக்கு புற்றுநோயை உண்டு பண்ணும் சக்தி இருப்பது தெரிய வந்துள்ளது.

22 வேதிப் பொருட்களால்...

22 வேதிப் பொருட்களால்...

அதேசமயம் 22 வேதிப் பொருட்களால் புற்றுநோய் வருவதில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

ஆபத்தானவை...

ஆபத்தானவை...

நாம் அதிக அளவில் பயன்படுத்தும் பூச்சி மருந்துகள், பூஞ்சைக் கொல்லிகள், பிளாஸ்டிக் போன்ற பொருட்கள், பிவிசி, வாட்டர் பாட்டில்கள், உணவுகளை அடைத்து வைக்கும் பெட்டிகள், பயோசைட்கள், கை கழுவ பயன்படுத்தும் திரவங்கள், காஸ்மெடிக்ஸ், அசிட்டோமினோபென், பினோபார்பிட்டால் போன்ற மருந்துகள், பெயிண்டுகளில் பயன்படுத்தும் பிளேம் ரிடார்டன்ட்டுகள், கட்டுமானப் பொருட்கள், விமானங்கள், கறை நீக்கிகள், துணிகளில் பயன்படுத்தும் சில வகை செயற்கைச் சாயங்கள் ஆகியவை புற்று நோயை ஏற்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.

புற்றுநோய் பாதிப்பு...

புற்றுநோய் பாதிப்பு...

இந்த வேதிப் பொருட்கள் கொஞ்சம் கொஞ்சமாக நமது உடலில் சேரும்போது அவை புற்றுநோயை ஏற்படுத்தம் வாய்ப்பு உள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது. இவை குறைந்த அளவில் உடலுக்குள் சேர்ந்தாலும் கூட அவை சேரச் சேர புற்றுநோய் பாதிப்பும் அதிகமாகிரது.

அதிர்ச்சித் தகவல்...

அதிர்ச்சித் தகவல்...

பற்பசைகளில் பயன்படுத்தப்படும் பிபிஏ எனப்படும் டிரைக்ளோசன் கூட புற்று நோய்க்கு வித்திடுகிறதாம். இது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

English summary
A staggering range of commonly used chemicals - from insecticides to plastic additives to some common medications - are likely to cause cancer even in very low amounts. This was the conclusion reached by a massive study involving 174 scientists from 28 countries -- including India -- who researched the chemical actions of these chemicals.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X