For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உயிரைவிட சாதியை பெரிதாகப் பார்க்கிறதா சமூகம்?

By BBC News தமிழ்
|

தெலங்கானாவில் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியின் கண்முன்னே தலித் கணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

"கடுமையான சட்டங்களை மீறியும் நடைபெறும் ஆணவக் கொலைகளுக்கு என்ன காரணம்? இன்றும் உயிரைவிட சாதியை பெரிதாக பார்க்கிறதா நம் சமூகம்?" என்று பிபிசி தமிழின் வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

அதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.

"இந்த உலகம் முழுவதும் ஒரே ஜாதி, ஒரே இனமாக இருந்தாலும், அப்போதும் மனிதன் ஏதாவது ஒரு காரணத்தை உருவாக்கி தற்பெருமை பேசி பிரிவினையை உருவாக்கி விடுவான்," என மைதீன் எனும் நேயர் கூறியுள்ளார்.

https://twitter.com/Rafhael616/status/1041213381368176640

அருண்நிதி மணிமாறன் எனும் பேஸ்ஃபுக் நேயர், "இந்தியாவில் பிரதமராக இருந்தவங்க சிலரும் முதல்வராக இருந்தவங்களும் ஜாதி அடயாளத்த விடவில்லை. பின்னர் எப்படி சாத்தியம்," என்று கேள்வி எழுப்புகிறார்.

சந்தோஷ் குமார் எனும் நேயர் "உடனே சமூகத்தை கையில் எடுக்கவேண்டாம். எங்கோ ஒரு இடத்தில் நடக்கிறது. முன்பு இருந்ததை விட இப்பொழுது எவ்வளவோ பரவாயில்லை," என்கிறார்.

#வாதம்_விவாதம்
BBC
#வாதம்_விவாதம்

"சட்டம் கடுமையாக இருந்தாலும் அதை அமல்படுத்தாமல் ஆதிக்க சாதி ஆதரவு மனநிலையில் செயல்படும் அதிகாரிகள் , சாதியவாதிகளின் அரசியல் அதிகாரம் சில பிற்போக்குவாதிகளின் விஷம பிரச்சாரம் போன்றவை ஆவணக் கொலைகள் நடைபெற ஊக்கமளிப்பதாக உள்ளன," என இளஞ்செழியன் சுப்பிரமணியன் எனும் நேயர் பதிவிட்டுள்ளார்.

"ஏன் இவர்கள் இம்மண்ணில் உயிர் வாழ கூடாதா? அவன் என்ன வேற்று கிரக வாசியா? அவனும் மனிதன்தானே?" என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார் செல்வா.

https://twitter.com/gobikamal333/status/1041238274616918017

"நான்தான் புள்ளைய பெத்தேன் நான்தான் வளர்த்தேன் என்று சொல்லும் பெற்றோர்களின் நெருங்கிய சொந்தங்கள் பெரும்பாலும் தன் சொந்த ஜாதியில் திருமண செய்து கொடுத்துவிட்ட பெண்களின் கணவன்மார்கள் குடிப்பழக்கத்தால் , புகைப்பழக்கத்தால் , கள்ளத்தொடர்பால், வரதட்சணைக் கொடுமையால், சொத்து தகராறால் அடித்துக் கொண்டாலும், தூர நின்று வேடிக்கை பார்த்து சிரிப்பார்கள்," என்ற விவேக் என்பவரின் கருத்தை சந்தோஷ் குமார் பகிர்ந்துள்ளார்.

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
"சட்டம் கடுமையாக இருந்தாலும் அதை அமுல் படுத்தாமல் ஆதிக்க சாதி ஆதரவு மனநிலையில் செயல்படும் அதிகாரிகளும் , சாதியவாதிகளின் அரசியல் அதிகாரமும் சில பிற்போக்குவாதிகளின் விஷம பிரச்சாரம் போன்றவை இது போன்ற ஆவணக் கொலைகள் நடை பெற ஊக்கமளிப்பதாக உள்ளன."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X