For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விடைபெற்றது கூட்டணி ஆட்சி சகாப்தம்! 30 ஆண்டுகளுக்குப் பின் தனிப்பெரும்பான்மையுடன் மத்திய அரசு!!

By Mathi
|

டெல்லி: நாட்டில் 1984ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக தனிப்பெரும்பான்மையுடன் மத்திய அரசு அமைகிறது.

நாடு இதுவரை 16 லோக்சபா தேர்தல்களை எதிர்கொண்டிருக்கிறது. 1984ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் இந்திரா படுகொலையால் ஏற்பட்ட அனுதாபத்தின் விளைவாக காங்கிரஸ் கட்சிக்கு 415 இடங்கள் கிடைத்தன.

Is coalition era over? India heads for majority govt after 30 years

அதன் பின்னர் நாட்டில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையைப் பெறவில்லை. எதிர்க்கட்சியாக இருந்த பாஜகவுக்கும் கிடைக்கவில்லை.

தற்போது 30 ஆண்டுகளுக்குப் பின்னர் நாட்டில் முதல் முறையாக தனிப் பெரும்பான்மை பலத்துடன் பாரதிய ஜனதா மத்திய அரசை அமைக்கிறது.

பெரும்பான்மைக்கு தேவை 272 இடங்கள். ஆனால் பாஜக 283 இடங்களைப் பெற்றுள்ளது.

அத்துடன் தனிப்பெரும்பான்மை பெற்ற காங்கிரஸ் அல்லாத முதல் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. மேலும் காங்கிரஸ் அல்லாத வலிமையான தனிப்பெரும்பான்மையுடன் கூடிய முதல் மத்திய அரசையும் பாரதிய ஜனதா அமைக்கிறது.

மேலும் இந்தியாவில் இதுவரை இருந்து வந்த கூட்டணி ஆட்சி சகாப்தம் என்பது முடிவுக்கும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The BJP was Friday set for a comfortable majority in the Lok Sabha, its candidates taking early leads in 277.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X