For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தவறு.. மத்திய அரசு அப்படி செய்திருக்க கூடாது.. நள்ளிரவில் நடந்த சம்பவத்தால் காஷ்மீரில் திருப்பம்

காஷ்மீரில் நேற்று நள்ளிரவில் நடந்த சம்பவம் ஒன்று அம்மாநில மக்கள் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Article 370 Removed | நீக்கப்பட்டது சட்டப்பிரிவு 370..காஷ்மீரில் இனி என்ன நடக்கும் தெரியுமா?-வீடியோ

    ஸ்ரீநகர்: காஷ்மீரில் நேற்று நள்ளிரவில் நடந்த சம்பவம் ஒன்று அம்மாநில மக்கள் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    காஷ்மீரில் இத்தனை வருடங்களாக நிலவி வரும் பிரச்சனை தற்போது உச்சம் அடைந்துள்ளது. அதிலும் காஷ்மீர் பிரச்சனையில் இன்று மதியம் முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

    காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக தற்போது மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்திற்கு பின் காஷ்மீர் பிரச்சனையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

    வாஜ்பாய்ஜி பாஜக தலைவராக இருந்தாலும் காஷ்மீரின் உணர்வுகளை புரிந்து கொண்டார்.. மெஹபூபா வாஜ்பாய்ஜி பாஜக தலைவராக இருந்தாலும் காஷ்மீரின் உணர்வுகளை புரிந்து கொண்டார்.. மெஹபூபா "ரீகால்ஸ்"

    யார் பக்கம்

    யார் பக்கம்

    காஷ்மீரில் எப்போதும் இந்தியாவின் கையே மேலே இருந்தது குறிப்பிடத்தக்கது. என்ன விதமான பிரச்சனை வந்தாலும் , காஷ்மீர் மக்களே எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட உலக நாடுகள் பல காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவின் பக்கமே இருந்தது. அதேபோல் கார்கில் போர் நடந்த போதும் கூட இந்தியாவின் பக்கமே உலக நாடுகள் இருந்தது.

    நிலைமை அப்படி இல்லை

    நிலைமை அப்படி இல்லை

    ஆனால் தற்போது காஷ்மீரில் நிலைமை அப்படி இல்லை. கார்கில் போரின் போது பாகிஸ்தான் செய்த தவறை தற்போது இந்தியா செய்கிறது. அமைதியாக இருந்த நிலப்பரப்பில் தேவையில்லாமல், இந்தியா பதற்றத்தை ஏற்படுத்துகிறது என்று புகார் எழுந்துள்ளது.

    பாகிஸ்தான் எப்படி

    பாகிஸ்தான் எப்படி

    ஆனால் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு அழைப்பது, அமெரிக்காவின் உதவியை கோருவது, ஐநாவின் மேற்பார்வையை கேட்பது என்று வரிசையாக மிதவாத தன்மைகளை கடைப்பிடித்து வருகிறது. இந்தியா இன்னொரு பக்கம் ஆயுதத்துடன் நிற்கிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இதில் மிகவும் கவனமாக காய்களை நகர்த்தி வருகிறார்.

    ஏன் அமைதி

    ஏன் அமைதி

    பாகிஸ்தான் ஒரு பக்கம் அமைதியாக செயல்பட்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்தியா அங்கு ராணுவத்தை குவித்து வருகிறது. போருக்கு தயார் ஆவதற்கு இணையாக இந்திய ராணுவம் அங்கு குவிக்கப்பட்டு வருகிறது. இதுதான் உலக நாடுகளின் பார்வையில் இந்தியாவின் மதிப்பை குறைத்துக் கொண்டே வருகிறது.

     இம்ரான் கான் அமைதி

    இம்ரான் கான் அமைதி

    அதிலும் இம்ரான் கான் உலக நாடுகளின் உதவியை கேட்டு வருவதால் இந்தியாவிற்கு அரசியல் ரீதியான உதவிகள் காஷ்மீர் பிரச்சனையில் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. அதிலும் ஆசியாவில் உள்ள ஜப்பான், சீனா போன்ற நாடுகள் இந்தியாவிற்கு இக்கட்டான நிலையில் உதவுமா என்று தெரியாத நிலை உருவாகியுள்ளது.

    கைது

    கைது

    இதெல்லாம் போக நேற்று மத்திய அரசின் உத்தரவின் பெயரில் முக்கியமான சம்பவம் ஒன்று நடந்தது. நேற்று நள்ளிரவில் காஷ்மீரில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் எல்லோரும் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, முக்கிய கட்சியான பீப்பிள் கான்பிரன்ஸ் கட்சியின் தலைவர் சஜாத் லோன் ஆகியோர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் அங்கு இணையம் துண்டிக்கப்பட்டுள்ளது.

    என்ன கோபம்

    என்ன கோபம்

    இதுதான் அம்மாநில மக்களை மத்திய அரசு மீது கோபம் கொள்ள வைத்துள்ளது. இந்த மூன்று தலைவர்களும் மக்களின் ஆதரவை பெற்ற முக்கிய தலைவர்கள். அந்த தலைவர்கள் சாலையில் இறங்கி போராட்டம் கூட செய்யவில்லை. என்ன நடக்கிறது என்று விளக்கம் கேட்டு, கேள்வி கேட்டதற்கு வீட்டு சிறையில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    என்ன நடக்கும்

    என்ன நடக்கும்

    முன்னாள் முதல்வர்களுக்கே இந்த கதி என்றால் சாதாரண மக்கள் என்ன ஆவார்கள். அங்கு என்ன எமர்ஜென்சி ஆட்சி நடக்கிறதா? இது என்ன சர்வாதிகாரம் என்று காஷ்மீர் மக்கள் கோபம் அடைய தொடங்கி உள்ளனர். இது காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவிற்கு இருந்த ''நல்ல பையன்'' பெயரை கெடுக்க வாய்ப்புள்ளதாகவே அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

    English summary
    Is India losing Kashmir's ''favorite country'' position after the house arrest of Two EX CM at midnight?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X