For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜார்க்கண்ட்: பாஜகவின் பின்னடைவுக்கு நிலம் கையகப்படுத்துதல் சட்டம்தான் காரணம்?

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜார்க்கண்ட் தேர்தலில் பாஜகவின் பின்னடைவுக்கு இதான் காரணமா ?

    ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளதற்கு அம்மாநில அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்துதல் சட்டமும் ஒரு காரணம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

    81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு 5 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இத்தேர்தலில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஆர்ஜேடி கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆட்சி அமைக்க தேவையான 41 இடங்களை இக்கூட்டணி பெற்றுள்ளது,

    ஜார்க்கண்ட் தேர்தல்: அடடே இந்தியா டுடே- ஆக்சிஸ் மை இந்தியா சொன்னது போலவே நடக்குதே! ஜார்க்கண்ட் தேர்தல்: அடடே இந்தியா டுடே- ஆக்சிஸ் மை இந்தியா சொன்னது போலவே நடக்குதே!

    பாஜகவுக்கு 29 இடங்கள்

    பாஜகவுக்கு 29 இடங்கள்

    தனித்துப் போட்டியிட்ட பாஜக 29 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட நிலம் கையகப்படுத்துதல் சட்டம் ஒரு காரணம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

    ரகுபர்தாஸ் முதல்வர்

    ரகுபர்தாஸ் முதல்வர்

    ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பெரும்பான்மை ஜாதியினரை முதல்வராக்கும் நடைமுறையை பாஜக கைவிட்டது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொதுவாக பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்தான் முதல்வராக்கப்படுவது வழக்கம். ஆனால் இதரபிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்த ரகுபர்தாஸை பாஜக முதல்வராக்கியது.

    நிலம் கையகப்படுத்துதல் சட்டம்

    நிலம் கையகப்படுத்துதல் சட்டம்

    இது பழங்குடி மக்களிடத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதேபோல் ரகுபர்தாஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்டமும் பழங்குடி மக்களிடையே பெரும் எதிர்ப்பை எதிர்கொண்டது. பல லட்சக்கணக்கான பழங்குடிகள் சொந்த நிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு அந்த நிலம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படும் வகையில் பாஜக அரசு சட்டம் கொண்டு வந்தது.

    தேர்தலில் முதன்மை பிரச்சனை

    தேர்தலில் முதன்மை பிரச்சனை

    உச்சநீதிமன்றத்தின் மூலம் இச்சட்டம் நடைமுறைப்படுத்துவது தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பாஜக அரசின் இந்த சட்டம்தான் லோக்சபா தேர்தலிலும் தற்போதைய சட்டசபை தேர்தலிலும் முக்கிய பிரச்சனையாக எதிரொலித்தது.

    பழங்குடி வாக்குகள்

    பழங்குடி வாக்குகள்

    காங்கிரஸ், ஜே.எம்.எம். உள்ளிட்ட கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்தன. ஆனால் பாஜகவோ ஜார்க்கண்ட் மாநில உருவாக்கம், ஜம்மு காஷ்மீர் பிரச்சனை ஆகியவற்றை பேசியது. இருப்பினும் பழங்குடி மக்களின் வாக்குகள் காங்கிரஸ்-ஜே.எம்.எம்.- ஆர்ஜேடி கூட்டணிக்கே கிடைத்திருக்கிறது என்பதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி உள்ளன.

    English summary
    Former Jharkhand CM Raghubar Das's decision to implement the Land Acquisition Amendment Act, 2013 may be responsible for the BJP's undoing in Assembly Elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X