For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதிய ரூபாய் நோட்டால் தொற்றுநோய் பரவுகிறதா? மத்திய அரசிடம் அளிக்கப்பட்ட புகார்!

புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டால் தொற்றுநோய் பரவுவதாக திடீர் சந்தேகம் எழுந்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டால் தொற்றுநோய் பரவுவதாக திடீர் சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பணமதிப்பிழப்பு நீக்கத்திற்கு பின் அப்போது பயன்பாட்டில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் எதுவும் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அதற்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சில நாட்களில் புதிய ரூபாய் நோட்டுகள் வெளியானது. அதோடு புதிய இரண்டாயிரம் மதிப்பு உள்ள நோட்டுகள் வெளியானது.

 தொற்று இருக்கிறதா

தொற்று இருக்கிறதா

இந்த நிலையில் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டால் தொற்றுநோய் பரவுவதாக திடீர் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த புதிய ரூபாய் நோட்டுகள் எளிதாக நோய் காரணிகளும், அழுக்குகளும் பரவும் வகையில் உள்ளது என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் காய்ச்சல் தொடங்கி நிறைய தொற்று நோய்கள் பரவுவதாக கூறப்படுகிறது.

புகார் அளித்துள்ளனர்

புகார் அளித்துள்ளனர்

இதுகுறித்து மத்திய அரசிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு சார்பில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி, சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கூறப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனை

மருத்துவ பரிசோதனை

அதுமட்டுமில்லாமல், இதுகுறித்து மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் இந்த ரூபாய் நோட்டுகளில், நோய் காரணிகள் உள்ளதா என்று பரிசோதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ கழகம், ரூபாய் நோட்டுக்களால் நோய்கள் பரவுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து, முடிவுகளை பொதுவில் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 ஏற்கனவே பிரச்சனை

ஏற்கனவே பிரச்சனை

இந்த புதிய ரூபாய் நோட்டுகளுக்கு எதிராக ஏற்கனவே நிறைய புகார்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டுகளில் 200 ரூபாய், 100 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்களில் வைக்க முடியவில்லை. மிக எளிதாக கள்ளநோட்டு அடிக்கப்படுகிறது. இதில் போதிய பாதுகாப்பின் வசதிகள் இல்லை என்று புகார் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Is new rupee notes cause Infection? A complaint filed to the Central Government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X