For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்ன விளையாட்டு இது... விளையாட்டு வீரர்களை சுயநலனுக்காக வளைக்கும் கட்சிகள்

Google Oneindia Tamil News

சென்னை: விளையாட்டுக்குள்ளும் அரசியலை புகுத்த ஆரம்பித்துள்ளனர் அரசியல்வாதிகள். இது பழைய ஸ்டைல்தான் என்றாலும் கூட சமீப காலமாக விளையாட்டு வீரர்களுக்கு விருது கொடுப்பதும் பாராட்டிப் புகழ்வதுமாக அரசியல்வாதிகள் கிளம்பியிருப்பது நடுநிலை ரசிகர்களைக் கவலை கொள்ளச் செய்து வருகிறது.

இந்த வீரர்கள் இவ்வளவு பெரிய பிரபலமாக ஆனதற்கு முக்கியக் காரணமே அவர்களுக்கு அனைத்துத் தரப்பு ரசிகர்களும் கொடுத்து வரும், கொடுத்து வந்த ஆதரவே முக்கியக் காரணம்.

ஆனால் இப்படிப்பட்ட வீரரர்களுக்கு அமைச்சர் பதவி தர்றோம் வா, விருது கொடுக்கிறோம் வா என்று ஆசை காட்டி வலை போட்டு இழுப்பது சரியான செயலாக இருக்குமா என்று தெரியவில்லை.

அந்தக் காலத்திலிருந்தே

அந்தக் காலத்திலிருந்தே

விளையாட்டு வீரர்களை, குறிப்பாக கிரிக்கெட் வீரர்களை அரசியலுக்குள் இழுப்பது காலம் காலமாகவே இந்தியாவில் நடந்து வரும் ஒரு செயல்தான்.

கிரிக்கெட் வீரர்களுக்கு அடுத்தடுத்து குறி

கிரிக்கெட் வீரர்களுக்கு அடுத்தடுத்து குறி

பெரும்பாலும் கிரிக்கெட் வீரரர்களுக்குத்தான் இந்தியாவில் தாறுமாறான ரசிகர் கூட்டம் இருக்கிறது.இதை வைத்து கிட்டத்தட்ட அரசியல்வாதிகள் பிசினஸ் செய்து வருகின்றனர்.

குறளி வித்தை போல

குறளி வித்தை போல

ஊர் ஊராக இந்த வீரர்களை வலம் வர வைத்து அவர்களின் ரசிகர்களை தங்களுக்கு ஆதரவாக திருப்பும் முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள் ரசிகர்கள். இது நிச்சயம் நியாயமானதல்ல என்பது நடுநிலை ரசிகர்களின் கருத்து.

சச்சினையும் இப்படித்தான்

சச்சினையும் இப்படித்தான்

இப்படித்தான் சச்சினுக்கும் மறைமுகமாக வலை வீசி அவரை காங்கிரஸ் காரர் போல காட்டி விட்டனர். அவருக்குப் பாரதரத்னா விருது கொடுத்தது, அதற்கு முன்பு ராஜ்யசபா எம்.பி பதவி கொடுத்தது ஆகியவை, அவரையும், அவரது ரசிகர்களையும் காங்கிரஸ் பக்கம் மறைமுகமாக வளைக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

பிரசாரத்திற்குப் போவாரா...

பிரசாரத்திற்குப் போவாரா...

தற்போது சச்சினை காங்கிரஸுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வைக்கவும் முயற்சித்து வருகிறதாம் காங்கிரஸ். ஆனால் சச்சின் பிடி கொடுக்கவில்லை என்கிறார்கள்.

ரஜினி அங்கே போனால் கமல் இங்கதானே வரணும்...

ரஜினி அங்கே போனால் கமல் இங்கதானே வரணும்...

கிரிக்கெட் உலகில் கிட்டத்தட்ட ரஜினி கமல் போல இருப்பவர்கள் சச்சினும், கங்குலியும். சச்சின் காங்கிரஸ் பக்கம் போய் விட்டதால், கங்குலி நமக்குத்தான் என்று பாஜகவினர் அவர்களாகவே ஒரு முடிவை எடுத்து மோடி மற்றும் வருண் காந்தி மூலம் பாஜகவுக்கு இழுக்க முயற்சி நடந்தது.

அட போங்கப்பா

அட போங்கப்பா

ஆனால் கங்குலியோ திட்டவட்டமாக மறுத்து விட்டார் பாஜகவுக்குப் போக. அமைச்சர் பதவி தருவதாக கூறியும் கூட அவர் இல்லை என்று கூறி விட்டாராம்.

அடுத்து எந்தத் தலை...

அடுத்து எந்தத் தலை...

இப்போது டோணியின் பெயரையும் தெருவுக்கு இழுத்து வந்துள்ளனர்.

சினிமா இடத்தைப் பிடிக்கும் கிரிக்கெட்

சினிமா இடத்தைப் பிடிக்கும் கிரிக்கெட்

முன்பெல்லாம் சினிமாவில் பிரபலமானால் ஸ்டிரெய்ட்டாக அரசியலுக்குப் போய் விட முடிந்தது. அதுதான் பல காலமாக பேஷனாகவும் இருக்கிறது. இப்போது அந்த இடத்திற்குக் கிரிக்கெட்டை கூட்டி வருகிறார்கள் போல.

பேசாம், அவங்களை ஒழுங்க விளையாட விடுங்கப்பா...!

English summary
It has become a fashion now to lure sports persons, particulary cricketers into politics. First Sachin was given a MP post and then Bharat Ratna. Now BJP is attempting to drag Ganguly in its fold.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X