For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உத்தரபிரதேசத்தில் பாஜக உண்மையிலேயே பெரிய வெற்றி பெற்றதா? புள்ளி விவரம் வேறு மாதிரி உள்ளதே!

By Veera Kumar
Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரபிரதேச மாநில உள்ளாட்சி தேர்தலில் பாஜக பெரிய வெற்றி பெற்றுவிட்டதை போல பிம்பம் உருவானாலும் கூட உண்மையில் நிலைமை அப்படி இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்து 8 மாதங்கள் கழித்து உத்தரபிரதேசத்தில் நடைபெற்றது இந்த உள்ளாட்சி தேர்தல்.

இதனாலும், ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்ற மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளதற்கு பிறகு நடைபெற்ற தேர்தல் என்பதாலும் இத் தேர்தல் தேசிய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்தது.

மாநகராட்சிகளில் வெற்றி

மாநகராட்சிகளில் வெற்றி

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. மொத்தமுள்ள 16 மாநகராட்சிகளில் 14 மாநகராட்சிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 2 மாநகராட்சிகளை வென்றது. எனவே பாஜக பெரும் வெற்றி பெற்றதாக செய்திகள் வெளியாகின.

உண்மையிலேயே பெரிய வெற்றியா

உண்மையிலேயே பெரிய வெற்றியா

அதேநேரம், உள்ளாட்சி தேர்தலில், மொத்தத்தில் பாஜக வென்ற இடங்களை கூட்டிப் பார்த்தால், இது எதிர்பார்த்த அளவுக்கான வெற்றி இல்லை என்பதை பாஜக தலைவர்கள் உணர்ந்துள்ளனர்.

வார்டுகள் எண்ணிக்கை

வார்டுகள் எண்ணிக்கை

மொத்தமுள்ள 16 மாநகராட்சிகளில் 1300 வார்டுகள் அடங்கும். அதில் பாஜக 535 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள வார்டுகளில் பகுஜன் சமாஜ் கட்சி 145 இடங்களையும், சமாஜ்வாதி கட்சி 171 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 86 இடங்களையும் வென்றுள்ளன. மற்ற இடங்களை மற்ற கட்சிகளும், சுயேச்சைகளும் கைப்பற்றி உள்ளன.

மூன்றில் ஒரு பங்கு வெற்றி

மூன்றில் ஒரு பங்கு வெற்றி

நகராட்சிகளை பொறுத்தளவில், மொத்தமுள்ள 198 நகராட்சிகளில் பாஜக 70ல் வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சைகள் 43 இடங்களை வென்றுள்ளன. சுமார் 3ல் ஒரு பங்கு இடத்தை மட்டுமே பாஜக வென்றுள்ளது.

மின்னணு இயந்திர வாக்குப்பதிவு

மின்னணு இயந்திர வாக்குப்பதிவு

மொத்தமுள்ள 5,261 நகராட்சி வார்டுகளில் 922 வார்டுகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சைகள் 3380 வார்டுகளில் வென்றுள்ளனர். இதனிடையே பாஜக வென்றதும் கூட மின்னணு இயந்திர வாக்குப்பதிவு காரணமாகத்தான் என மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார். இதை சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவும் வழி மொழிகிறார்.

வெற்றி வித்தியாசம்

வெற்றி வித்தியாசம்

அகிலேஷ் யாதவ் கூறுகையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட இடங்களில் பாஜக வெற்றி சதவீதம் 46 என்ற அளவிலும், காகிதம் அடிப்படையிலான பழைய முறைகளில் வாக்குப்பதிவு நடைபெற்ற இடங்களில் பாஜக வெற்றி சதவீதம் 15 என்ற அளவில் குறைவாக உள்ளதாகவும் தெரிவித்தார். அதேநேரம், எதிர்க்கட்சிகள் தோல்வியால் குறைகூறிக்கொண்டுள்ளதாக பாஜக தெரிவிக்கிறது. ஒருவேளை வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடக்கவில்லை என்று எடுத்துக்கொண்டாலும் கூட பழைய முறையில் வாக்களிக்கும் கிராமப்புறங்களில் பாஜகவுக்கு செல்வாக்கு இல்லை என்பதே இந்த புள்ளி விவரம் சொல்லும் பாடம்.

English summary
Former chief minister Akhilesh Yadav said, "BJP's winning percentage is about 46 per cent wherever polls were conducted via EVMs and 15 per cent when it was done via ballot papers."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X