For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாதி, மத அரசியலுக்குப் பின்னால் வணிக நோக்கம் உள்ளதா?

By BBC News தமிழ்
|

அரசியல் முதல் கலைத் துறை வரை, தாஜ் மஹால் முதல் கிச்சடி வரை அனைத்தும் மதத்துடன் தொடர்புபடுத்தப்படும் சூழல் சமீப காலமாக இந்தியாவில் நிலவி வருகிறது.

சாதி, மத அரசியலுக்குப் பின்னால் வணிக நோக்கம் உள்ளதா?
Getty Images
சாதி, மத அரசியலுக்குப் பின்னால் வணிக நோக்கம் உள்ளதா?

சாதாரண பிரச்சனை கூட மதரீதியான சர்ச்சைக்கு உள்ளாக்கப்படுவது அரசியல் ஆதாயத்திற்கா, ஆரோக்கியமான விவாதமா என்று பிபிசி தமிழின் சமூக வலைதள நேயர்களிடம் வாதம்-விவாதம் பகுதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்கள் பதிவிட்ட கருத்துக்களில் தேர்நடுத்தவற்றைத் தொகுத்து வழங்குகிறோம்.

  • "அரசியல் ஆதாயத்திற்காகவே இதுபோன்ற கருத்துகள் சர்ச்சை ஆக்கபடுகிறது. பிஜேபி ஆட்சிக்கு வந்ததில் இருந்து மத சகிப்பின்மை தலைவிரித்து ஆடுகிறது," என்று பீர் முகமது எனும் நேயர் கூறியுள்ளார்.

  • "இந்து மதத்த எவன் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்று ஆகி விட்டது. அதை சுட்டி காட்டும்போது அவர்கள் மதவாதி ஆக்கபடுகிறார்கள்," என்று சிவக்குமார் சென்னியப்பன் பதிவிட்டுள்ளார்.

    தேசியக்கட்சிகளுக்கு தேவை

    "எண்ணற்ற தேசிய இனங்கள் உள்ளடக்கி பன்முகத்தன்மை கொண்ட இந்திய ஒன்றியத்தை ஒற்றைத் தேசிய இனமாக மாற்றி மிகப்பெரிய வணிகச்சந்தைக்கு வழிவகுக்க இங்கே சாதி, சமய அரசியல் தேசியக்கட்சிகளுக்கு தேவைப்படுகிறது," என்று கூறியுள்ளார் சக்தி சரவணன்.

    சாதி, மத அரசியலுக்குப் பின்னால் வணிக நோக்கம் உள்ளதா?
    BBC
    சாதி, மத அரசியலுக்குப் பின்னால் வணிக நோக்கம் உள்ளதா?

    அவர் மேலும் இவ்வாறு கூறுகிறார், "நிலப்பரப்பு, காலநிலை அடிப்படையில் உணவு, உடை, பழக்கவழக்கங்கள், கலாசாரம் என வேறுபட்டு இருப்பினும் தாய்மொழியை முதன்மையாகக் கொண்டு தோன்றிய பற்பல தேசிய இனங்களில் வேற்று மொழி, உணவு, வழிபாட்டு வழக்கங்களைத் திணித்து பிரிவினையின் மூலம் ஒரு சிலர் அரசியல் மற்றும் வணிக லாபம் அடைகின்றனர்."

  • டீ கடை ரிடர்ன், எனும் பெயரில் ஃபேஸ்புக்கில் பதிவிடும் நேயர்"வேற்றுமையிலும் ஒற்றுமை என்பவர் - #இந்தியன். ஒற்றுமையில் வேற்றுமையை உருவாக்க நினைப்பவர் #ஆண்டி இந்தியன்," என்று பதிவிட்டுள்ளார்.

  • "மொழி வேறு மதம் வேறு. தமிழ்மொழி பேசுற இனம் தமிழினம் இனத்தின் பெருமைகளை மதத்தின் பெருமையாகவும். மதத்தை இனத்தின் அடையாளமாகவும் காட்ட முற்படுவது தவறு. இந்து கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்கள் அனைத்துமே தமிழனுக்கு அந்நிய மதங்களே பழந்தமிழர் வழிபாடு இறந்த முன்னோர் வழிபாடான நீத்தார் வழிபாடேயன்றி மற்ற ஏதும் கிடையாது. எல்லாம் பிற்காலத்தில் வந்தவைதான். குறிப்பாக இந்துமதம் என்பது மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவிற்குள் வந்தது. வரலாற்றில் தெளிவாக உள்ளது." என்று மும்மதங்களையும் அந்நிய மதம் என்று கூறியுள்ளார் சூரிய பிரகாஷ் எனும் பிபிசி நேயர்.

    பிற மதத்தவர்களை பற்றி சந்தேகங்கள் எழுந்துவிட்டன

    சாதி, மத அரசியலுக்குப் பின்னால் வணிக நோக்கம் உள்ளதா?
    Getty Images
    சாதி, மத அரசியலுக்குப் பின்னால் வணிக நோக்கம் உள்ளதா?

    "இது ஆரோக்கியமான தலைப்பு. மத ரீதியாக மக்களை பிரித்து அதன் மூலம் ஆதாயம் தேட நினைப்பவர்கள் தான் சாதாரண பிரிச்சனையை கூட மத ரீதியாக மாற்றுகின்றனர். இதனால் என்ன விளைவுகள் ஏற்பட்டது எனில் உண்மையில் மக்களின் உள்ளங்களில் பிற மதத்தவர்களை பற்றி சந்தேகங்கள் எழுந்துவிட்டன," என்று கூறியுள்ளார் கலிமுல்லா முஸ்தக்.

  • "அப்போ எவன் வேணுமானும் இந்து மத்தை எப்படி வேணும்னாலும் இழிவாக பேசுவான்.....மானமுள்ள இந்து தட்டி கேட்ட அவர்கள்?காவி தீவிரவாதீகளா....." என்று கேள்வி எழுப்புகிறார் சதீஷ் ஐயப்பன்.

    சாதி, மத அரசியலுக்குப் பின்னால் வணிக நோக்கம் உள்ளதா?
    Getty Images
    சாதி, மத அரசியலுக்குப் பின்னால் வணிக நோக்கம் உள்ளதா?

    அதே போன்றதொரு கருத்தைக் கூறியுள்ளார் பாலசுப்பிரமணியம் ராஜு." எது அரசியல் ஆதாயம்?ஹிந்து மதத்தினையும்,ஹிந்து மத சடங்குகளையும்,ஹிந்துக்களை மட்டுமே குறி வைத்து தாக்கப்படுவது ஏன்? காலங்காலமாக கடித்துவிட்டு போகிறார்கள் என விலகி சென்றது குற்றமா?

  • இல்லை திருப்பி கடித்தால் தீவிரவாதிகளா?," என்கிறார் அவர்.

    பிற செய்திகள்

  • BBC Tamil
    English summary
    "எண்ணற்ற தேசிய இனங்கள் உள்ளடக்கி பன்முகத்தன்மை கொண்ட இந்திய ஒன்றியத்தை ஒற்றைத் தேசிய இனமாக மாற்றி மிகப்பெரிய வணிகச்சந்தைக்கு வழிவகுக்க இங்கே சாதி, சமய அரசியல் தேசியக்கட்சிகளுக்கு தேவைப்படுகிறது."
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X