For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லண்டனில் கைது செய்தது பெரிய சாதனையா?.. ஆமா நீரவ்மோடியை வெளிநாட்டுக்கு தப்பவிட்டது யார்?.. பிரியங்கா

Google Oneindia Tamil News

வாரணாசி: லண்டனில் வைத்து நீரவ் மோடியை கைது செய்தது பெரிய சாதனையாக பாஜக கொண்டாடி வருகிறது என பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

வைர வியாபாரியான நீரவ் மோடி இந்தியாவில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ 13,500 கோடி கடன் பெற்றார். அதை வங்கி திருப்பி கேட்டபோது கடனை செலுத்தாமல் லண்டனுக்கு தப்பியோடிவிட்டார்.

“Is this achievement” asks Priyanka Gandhi; “Who allowed Nirav Modi to flee?”

ஏற்கெனவே விஜய் மல்லையாவும் இது போல் 14,000 கோடி ரூபாயை கடனாக பெற்றுக் கொண்டு லண்டனுக்கு தப்பியோடிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நீரவ் மோடியை நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்தியா செய்து வந்தது.

என்னாது அதிமுகவில் நானா.. மதுரை ஆதீனம் கூறியதில் உண்மை இல்லை- டிடிவி தினகரன்என்னாது அதிமுகவில் நானா.. மதுரை ஆதீனம் கூறியதில் உண்மை இல்லை- டிடிவி தினகரன்

மாறுவேடத்தில் சுற்றித் திரிந்த நீரவ் மோடி நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார். இதை பாஜக சாதனையாக பிரசாரத்தில் கூறி வருகிறது. இதுகுறித்து கங்கா யாத்ராவில் ஈடுபட்டுள்ள காங்கிரஸின் பிரியங்கா காந்தியிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

அப்போது அவர் கூறுகையில் நீரவ் மோடியை லண்டனில் போய் கைது செய்தது ஒரு சாதனையா. அவரை வெளிநாட்டுக்கு தப்ப விட்டது யார் என கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
Priyanka Gandhi on Wednesday asked how can fugitive diamond merchant Nirav Modi's arrest in London be claimed as an achievement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X