For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முத்தலாக்கிற்கு எதிராக வழக்கு தொடர்ந்த இஷ்ரத் பாஜகவில் இணைந்தார்!

முத்தலாக்கிற்கு எதிராக வழக்கு தொடர்ந்த இஷ்ரத் ஜஹான் பாஜகவில் இணைந்தார்.

By Dakshinamurthy
Google Oneindia Tamil News

Recommended Video

    மாணவர்களுக்கு மதிய உணவாக சப்பாத்தி, காய்கறி- புதுவை முதல்வர் அறிவிப்பு- வீடியோ

    கொல்கத்தா: முத்தலாக்கிற்கு எதிராக வழக்கு தொடர்ந்த பெண்களில் முக்கியமானவராக கருதப்படும் இஷ்ரத் ஜஹான் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டுள்ளார்.

    இஸ்லாமியர்களின் மத நம்பிக்கை படி தலாக் என்ற வார்த்தையை மூன்று முறை கூறி விட்டால் திருமணமான ஆணுக்கும் பெண்ணுக்கும் விவாகரத்து ஆகிவிட்டதாக கருதப்படுகிறது. இந்நிலையில் இந்த நடைமுறையை எதிர்த்து கொல்கத்தாவை சேர்ந்த பெண்கள் சிலரும், பெண்கள் அமைப்பும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

    Ishrat Jahan joins BJP

    வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த முறை சட்டவிரோதம் என்றும், அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது என்றும் இதற்கு தடை விதித்து தீர்ப்பளித்தனர். மேலும் இதுதொடர்பான புதிய தடை சட்டத்தையும் பாஜக அரசு இந்த குளிர்க்கால கூட்டத்தொடரில் சட்டமாக நிறைவேற்றியது.

    இந்நிலையில் இந்த வழக்கு தொடர்ந்தவர்களில் முக்கியமானவராக கருதப்படும் இஷ்ரத் ஜஹான் பாஜகவில் தன்னை இணைத்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் வசித்து வரும் அவருக்கு தொடர்ந்து மிரட்டல் வந்ததாகவும், இதன் காரணமாகவே பாதுகாப்பு கருதி பாஜகவில் இணைந்ததாகவும் கூறப்படுகிறது.

    மத கட்டுப்பாடுகளையும், மத சட்டங்களுக்கு எதிராகவும் தீர்ப்பு பெற காரணமாக இருந்தார் என்று இஷ்ரத் மீது மதவாத அடிப்படைவாதிகள் சிலர் மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

    English summary
    Ishrat Jahan, one of the petitioners in the triple talaq case, has joined the BJP. As result of ishrat jahan struggle a new law was passed against triple talaq
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X