For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய, இஸ்ரேல் உறவு "திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதை போன்றது"... நேத்தன்யாகூ பெருமிதம்!

ஜெருசலம் விவகாரத்தில் இந்தியா இஸ்ரேலுக்கு எதிராக ஐநாவில் வாக்களித்தாலும் இந்திய இஸ்ரேல் உறவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அந்த நாட்டின் பிரதமர் நேத்தன்யாகூ தெரிவித்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

டெல்லி : ஜெருசலம் விவகாரத்தில் இந்தியா இஸ்ரேலுக்கு எதிராக ஐநாவில் வாக்களித்தாலும் இந்திய இஸ்ரேல் உறவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அந்த நாட்டின் பிரதமர் நேத்தன்யாகூ தெரிவித்துள்ளார். அரசு முறை சுற்றுப் பயணமாக டெல்லி வந்துள்ள நேத்தன்யாகூ தனது இந்திய வருகையால் தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் உலகை மாற்றும் விஷயங்களில் மேலும் வலுப்படுத்தும் வகையில் ஒத்துழைப்பு நல்கப்படும் என்றும் நேத்தன்யாகூ கூறியுள்ளார்.

அரசு முறைப்பயணமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாகூ நேற்று இந்தியா வருகை தந்தார். இஸ்ரேல் பிரதமரை, பிரதமர் மோடி விமான நிலையம் வரை சென்று வரவேற்றார். டெல்லி வந்துள்ள நேத்தன்யாகூ, இஸ்ரேல் தலைநகராக ஜெருசலத்தை மாற்ற ஐநாவில் நடந்த வாக்குப்பதிவில் இந்தியா தங்களுக்கு எதிராக வாக்களித்ததால் இந்திய, இஸ்ரேல் உறவில் எந்த பாதிப்பும் இல்லை என்றார்.

Israel PM Netanyahu says India, Israel ties will continue

தன்னுடைய இந்திய யணம் இரு நாடுகளிடையேயான தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் உலகில் மாற்றத்தை சந்திக்கும் விஷயங்களளில் இணைந்து செயல்படுவதற்கான ஒத்துழைப்பு தொடர்ந்து நல்கப்படும். "உண்மையில் இந்தியா ஜெருசலமை தலைநகராக்கும் அறிவிப்பிற்கு ஆதரவாக வாக்களித்தது எங்களுக்கு வருத்தமான விஷயம் தான், ஆனால் என்னுடைய வருகை என்பது இரு நாட்டு உறவையும் முன் எடுத்து செல்வதற்கான சந்திப்பு" என்று நேத்தன்யாகூ கூறியுள்ளார்.

கடந்த மாதத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக்கும் முடிவை அறிவித்தார். இது தொடர்பாக ஐநா பொதுசகையில் நடந்த வாக்கெடுப்பில் இந்தியா உள்பட 127 நாடுகள்இந்தியா உள்பட 127 நாடுகள்இந்தியா உள்பட 127 நாடுகள்இந்தியா உள்பட 127 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன.

"முதலில் இந்தியா இஸ்ரேல் மக்கள் மற்றும் தலைவர்கள் இடையே சிறப்பான உறவுமுறை உள்ளது. இருநாட்டு பந்தம் என்பது திருமணம் எப்படி சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டு பூமியில் நடக்கிறது என்று சொல்கிறார்களோ அதைப் போன்றது என்ற நேத்தன்யாகூ கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ஒரு சிறந்த தலைவர், தங்கள் நாட்டு மக்களுக்கு நல்ல எதிர்காலத்தை கொடுக்கக் கூடிய பொறுமையான குணம் படைத்தவர் என்றும் நேத்தன்யாகூ புகழாரம் சூட்டியுள்ளார்.

தீவிரவாதத்தை ஒழிக்க பிரதமருடன் செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்து பேசிய நேத்தன்யாகூ "இந்தியா அதன் சொந்த விருப்பங்களை தேர்வு செய்யட்டும். எனினும் பயங்கரவாதத்தை கையாள இரண்டு வழிகள் உள்ளன. உளவுத்தகவலின் அடிப்படையில் பயங்கரவாத செயலை தடுக்க வேண்டும் இரண்டாவது, கொலைகாரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

English summary
Israel PM Netanyahu says India, israel relationship is like Marriages made in heaven and India vote against Jerusalem issue at UN cannot affect the relationship between the two countries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X