போட்டுடைத்த முன்னாள் உளவுத்துறை அதிகாரி - பெகாசஸ் வாங்க ஆந்திர அரசை அணுகிய இஸ்ரேல் நிறுவனம்
அமராவதி : இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள், உயரதிகாரிகள், நீதிபதிகள், பத்திரிகையாளர்களை உளவு பார்க்க பயன்படுத்தப்பட்ட பெகாசஸ் செயலியை ஆந்திர அரசிடம் விற்பனை செய்ய இஸ்ரேலை சேர்ந்த என்.எஸ்.ஓ. நிறுவனம் முயற்சி செய்ததாக ஆந்திராவின் முன்னாள் உளவுத் துறை அதிகாரி வெங்கடேஷ்வர ராவ் தெரிவித்துள்ளார்.
தனியார் இணைய ஊடகத்துக்கு பேட்டியளித்த அவர், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருந்தபோது பெகாசஸ் நிறுவனம் ஆந்திர அரசை அணுகியதாக கூறினார்.
சட்டசபை கூட்டம் ஏப்ரல் 6-ல் தொடங்கி மே 10 வரை நடைபெறும்! விடுமுறை நீங்கலாக மொத்தம் 22 நாட்கள்!
ஏற்கனவே ஜெகன்மோகன் ரெட்டி அரசு, சந்திரபாபு நாயுடு ஆட்சியின்போது பெகாசஸ் செயலி வாங்கப்பட்டதா என்பதை கண்டறிய விசாரணைக்குழு அமைக்க அண்மையில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது.

உளவுத்துறையை அணுகிய இஸ்ரேல் நிறுவனம்
இந்த நிலையில், இதுகுறித்து பேசியுள்ள வெங்கடேஷ்வர ராவ் "எந்த ஒரு நிறுவனமும் வேவு பார்ப்பது தொடர்பான கருவிகளை வாங்க காவல்துறை அல்லது உளவுத்துறையை அணுகும். இதுபோல் என்.எஸ்.ஓ. நிறுவனம் உளவுத்துறையை அணுகியது. நாங்கள் அரசிடம் இந்த தகவலை கொண்டு சென்றோம்.

நோ சொன்ன சந்திரபாபு நாயுடு அரசு
அப்போது இது சட்டப்படி சரியானதா என அரசு கேள்வி எழுப்பியது. நாங்கள் இதுசட்டப்படி சரியில்லை என விளக்கமளித்தோம். உடனே இந்த திட்டத்தை கைவிட அரசு எங்களுக்கு உத்தரவிட்டது. அத்துடன் இப்பிரச்சனை முடிந்து விட்டது." எனக்கூறினார்.

தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது அவசியம்
பெகாசஸ் உளவு மென்பொருள் குறித்து ஆந்திர அரசிடம் தெரிவித்தது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த வெங்கடேஷ்வர ராவ், "அது குறித்து அரசாங்கத்திடம் தெரிவிக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. உலகில் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்கள் குறித்து அரசிடம் நாங்கள் சொல்ல வேண்டும். தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நடக்கும் குற்றங்களை தடுக்க உதவும் கருவிகளை அரசிடம் நாங்கள் அறிமுகப்படுத்துவோம். தொழில்நுட்ப ரீதியாக தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்." என்றார்.

அது ரொம்ப ரகசியமான விசயம்
இந்த உளவு மென்பொருளை வேறு மாநிலம் வாங்கியதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "இது அவ்வளவு எளிதில் வெளியே தெரியக்கூடிய விசயம் அல்ல. அதனை விற்கும் நிறுவனங்கள் ரகசியம் காப்பவை. எனவே மற்ற மாநிலங்கள் குறித்து எங்களுக்கு தெரியாது." எனத் தெரிவித்தார்.

மம்தா பானர்ஜி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அம்மாநில சட்டப்பேரவையில், பெகாசஸ் செயலியை வாங்குமாறு என்.எஸ்.ஓ. நிறுவனம் தங்களை அணுகியதாக கூறினார். 4 முதல் 5 ஆண்டுகள் வரை பெகாசஸ் செயலியை பயன்படுத்த ரூ.25 கோடியை என்.எஸ்.ஓ. நிறுவனம் கேட்டதாக அவர் கூறினார். இந்த நிலையில் ஆந்திர அரசையும் இஸ்ரேல் நிறுவனம் அணுகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.