For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீண்டும் வெற்றிகரமாக செயல்படத் தொடங்கியது மங்கள்யான்.. இஸ்ரோ தலைவர் தகவல்

By Sakthi
Google Oneindia Tamil News

சென்னை : மங்கள்யான் செயற்கைக்கோள் சிறிது இடைவெளிக்கு பின்னர் மீண்டும் வெற்றிகரமாக செயல்பட தொடங்கி உள்ளதாக இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் மங்கள்யான் செயற்கைக்கோள் சிறிது இடைவெளிக்கு பின்னர் மீண்டும் வெற்றிகரமாக செயல்பட தொடங்கி உள்ளது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.

isro

தற்போது இந்த செயற்கைக்கோளை தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து எந்தவித தடங்கலும் இன்றி இயக்கி வருவதாகவும், மங்கள்யான் செயற்கைக்கோள் பல அரிய தகவல்களை அனுப்பி வருவதாகவும் கிரண்குமார் கூறினார்.

இந்த மாத இறுதியில் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-2 ரக செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படும் என்றும், அதற்கான தேதி முடிவு செய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இதற்காக நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தேதி முடிவு செய்யப்படும் என்பதை குறிப்பிட்ட இஸ்ரோ தலைவர் கிரண்குமார் சந்திரயான்-2 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான முதற்கட்ட பணி தொடங்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

English summary
Isro Chairman Kirankumar arrived to Chennai. He said to Media that mangalyan functioning after a period
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X