For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தகவல் தொடர்பு செயற்கைகோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்

தகவல் தொடர்பு செயற்கைகோளுடன் விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

ஸ்ரீஹரிகோட்டா: தகவல் தொடர்பு செயற்கைகோளுடன் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்.

ஜி-சாட் 6 என்ற அந்த செயற்கைகோளை இஸ்ரோ நிறுவனம் இன்னும் சற்று நேரத்தில் ஏவப்படுகிறது. இதற்கான கவுன்ட்டவுன் நேற்று மதியம் 1.56 மணிக்கு தொடங்கியது. 415.6 டன் எடையும், 49.1 மீ உயரமும் கொண்ட ஜிஎஸ்எல்வி எஃப் 8 ராக்கெட் மூலம் ஜிசாட் 6 ஏ செயற்கைகோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

ஜிசாட் 6ஏ , ஜிசாட் 6 செயற்கைகோளின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும். இந்த செயற்கைகோள் விண்ணில் 10 ஆண்டுகள் வரை செயல்பாட்டில் இருக்கும். இந்த செயற்கைகோள் இந்தியாவில் செல்போன் சேவைகளை மேம்படுத்த உதவிகரமாக இருக்கும்.

17 நிமிடங்கள்

17 நிமிடங்கள்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் தொழில்நுட்பம் கொண்ட 6-ஆவது ராக்கெட் ஜிஎஸ்எல்வி எஃப் 08 ஆகும். ஜிஎஸ்எல்வியை பொருத்தமட்டில் இது 12-ஆவது ஆகும். இந்த ராக்கெட் 17 நிமிடங்கள் 46.50 வினாடிகளில் நிலைநிறுத்தப்பட்டது.

 எஸ் பேன்ட்

எஸ் பேன்ட்

சுமார் 2 டன் எடை கொண்ட இந்த ஜிசாட் செயற்கைகோளின் மதிப்பு ரூ.270 கோடியாகும். செயற்கைகோள் 1.53மீx1.65மீx2.4மீ அளவு கொண்டதாகும். ஜிசாட் 6 ஏ என்பது இந்தியாவின் 2-ஆவது எஸ் பேன்ட் தகவல் தொடர்பு செயற்கைகோள் ஆகும். ஜிசாட் 6 என்பது முதல் செயற்கைகோளாக இருந்தது.

 முதல் செயற்கைகோள்

முதல் செயற்கைகோள்

இஸ்ரோ தலைவராக கே.சிவன் பொறுப்பேற்று கொண்ட பிறகு ஏவப்பட்ட முதல் செயற்கைகோள் இதுவாகும். இந்த செயற்கைகோளில் 6 மீட்டர் அகலம் கொண்ட குடை போன்ற ஒரு ஆன்டன்னா பொருத்தப்பட்டுள்ளது. இது அதன் பாதையை அடைந்தவுடன் விரிந்து கொள்ளும் தன்மை கொண்டது.

 செல்போன் தொடர்புகளுக்கானது

செல்போன் தொடர்புகளுக்கானது

இந்த ஆன்டன்னாவானது எங்கிருந்தாலும் செல்போன் தொடர்புகளை அனுமதிக்கும். இது ராணுவ பயன்பாட்டுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. எஸ் பேன்ட் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் உலகம் முழுவதும் 4ஜி சேவைகளை பெற 2.5 ஜிகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை பயன்படுத்தப்படுகிறது.

English summary
The ISRO launched its latest communication satellite - GSAT-6A on today. The launch happens from the Satish Dhawan Space Centre in Andhra Pradesh's Sriharikota.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X