For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜுலை 15ம் தேதி நிலாவுக்கு ஏவப்படுகிறது 'சந்திராயன் 2'... இஸ்ரோ தலைவர் சிவன் முக்கிய தகவல்

Google Oneindia Tamil News

Recommended Video

    Chandrayaan 2 | செப்டம்பர் 6-ம் தேதி சந்திரயான் நிலவில் தரையிரங்கும்.. இஸ்ரோ தகவல்- வீடியோ

    ஸ்ரீகரிகோட்டா: சந்திராயன் - 2 விண்கலம் வரும் ஜுலை 15ம் தேதி அதிகாலை 2.51 மணிகு ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து ஏவப்பட உள்ளது. இதற்கான இறுதிகட்ட பணியில் உள்ள இஸ்ரோ, முதல் முறையாக அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. சந்திராயனுடன் லோண்ட் மற்றும் ரோவர கருவிகள் நிலவுக்கு செல்ல உள்ளன

    இந்தியா சந்திராயன் 1 விண்கலத்தை கடந்த 2008ம் ஆண்டு நிலாவுக்கு அனுப்பி உலகை திரும்பி பார்க்க வைத்தது. இந்த விண்கலம் நிலாவை சுற்றி வைத்து ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில் நீர் வளத்தடங்கள் நிலாவில் இருப்பதை இந்தியா கண்டுபிடித்து உலகத்துக்கு சொன்னது. மிகக்குறைந்த செலவில் விண்கலத்தை அனுப்பி நீர் இந்தியாவின் இந்த செயலை உலகே பாராட்டின. இந்த விண்கலத்தின் ஆயுள் காலம் கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவு பெற்றது.

    அதன் பின்னர் சந்திராயன் 2 விண்கலத்தை உருவாக்கும் பணியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவமான இஸ்ரோ ஈடுபட்டு வந்தது. தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் சந்திராயன் 2 விண்கலத்தை உருவாக்கி உள்ளது. தற்போது இறுதிகட்ட பணிகளில ஈடுபட்டு வருகிறது. சந்திராயன் 2 புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

     விக்ரம்-பிரக்யான்

    விக்ரம்-பிரக்யான்

    இதில் சந்திராயன் 2 விண்கலத்துடன் செல்ல உள்ள லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவற்றின் புகைப்படங்களும் வெளியாகி உள்ளது. இதில் லேண்டர் கருவிக்கு விக்ரம் என்றும் ரோவர் கருவிக்கு பிரக்யான் என்றும் பெயரிட்டுள்ளார்கள்.

     ஜுலையில் அனுப்ப

    ஜுலையில் அனுப்ப

    சந்திராயன் 2 விண்கலம் லேண்டர் மற்றும் ரோவர் கருவிகளுடன் ஜிஎஸ்எல்வி மார்க் -III ஏவுகனை மூலம் வரும் வரும் ஜுலை 15ம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு நிலவுக்கு அனுப்ப இஸ்ரோ முடிவு செய்துள்ளது. இந்த தகவலை இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மொத்தம் 13 வகையாக கருவிகள் சந்திராயன் 2 விண்கலத்துடன் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

     தனித்தனியாக செயல்படும்

    தனித்தனியாக செயல்படும்

    ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து நிலவுக்கு அனுப்பப்பட்ட பின்னர் அங்கு அவரை தனித்தனியாக பிரிந்து செயல்பட போகின்றன. லேண்டர் (விக்ரம்) நிலவின் தென்துருவ பகுதியில் ஆராய்ச்சியை ஆராய்ச்சி மேற்கொள்ளப்போகிறது.

    14 நாளில் நிலாவில்

    சந்திராயன் 2 விண்கலத்தின் எடை 3290 கிலோ ஆகும். இதில் நவீன முப்பரிமான கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க் 3 மூலம் பூமியில் இருந்து ஏவப்பட உள்ளது இது வெற்றிகரமாக ஏவப்பட்டால் 14 நாளில் நிலவுக்கு சென்றுவிடுமாம். அதன்பிறகு தனது ஆராய்ச்சியை தொடங்கும் என கூறப்படுகிறது.

    English summary
    Pictures of the modules of India's second lunar mission Chandrayaan-2 that is scheduled to be launched between July 9 and 16.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X