இஸ்ரோவின் பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளின் 3 தோல்விகளுக்கான காரணங்கள் இதுதான்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோவின் பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் 3 முறை தொழில்நுட்ப காரணங்களாள் தோல்வியடைந்துள்ளன.

பிஎஸ்எல்சிவி 39 ராக்கெட் மூலம் ஐஆர்என்எஸ்எஸ்எச் -1 செயற்கை கோளை இஸ்ரோ விண்ணில் ஏவியது. அடுத்தடுத்த நிலைகளை வெற்றிகரமாக தாண்டியது.

ஆனால் ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறால் செயற்கை கோள் பிரியவில்லை. இதனால் சுற்று வட்டப்பாதையில் நிறுத்த இயலாமல் தோல்வி ஏற்பட்டது.

இஸ்ரோவைப் பொறுத்தவரை இதற்கு முன்னர் பிஎஸ்எல்வி ரக ராக்கெட்டுகள் 3 முறை தோல்வியை சந்தித்துள்ளன. ஆனால் இதில் ஒரு ராக்கெட்தான் முழு தோல்வியடைந்தது. எஞ்சிய இரண்டும் பகுதிதான் தோல்வியடைந்தன.

முதல் தோல்வி

முதல் தோல்வி

பிஎஸ்எல்வி ரக ராக்கெட்டுகளில் முதலாவது பிஎஸ்எல்வி டி 1 ஆகும். இதுதான் முதல் பிஎஸ்எல்வி பயணமாகும்.

1993ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி இந்த ராக்கெட் ஏவப்பட்டது. ஆனால் ராக்கெட் கிளம்பிய 12 நிமிடங்களிலேயே இது தோல்வியைச் சந்தித்தது.

வங்கக் கடலில் விழுந்தது. ராக்கெட்டின் முதல்கட்டம் சரியாக செயல்பட்டது. 2வது கட்டத்தில் சாப்ட்வேர் பிரச்சினை காரணமாக ராக்கெட் கீழே விழுந்தது. இந்த ராக்கெட்டில் ஐஆர்எஸ்1 இ செயற்கைக் கோள் இணைக்கப்பட்டிருந்தது. இது மட்டும்தான் பிஎஸ்எல்வி ரக ராக்கெட்டுகளிலேயே முழுமையான தோல்வியாகும்.

2வது தோல்வி

2வது தோல்வி

2வது தோல்வி பிஎஸ்எல்வி சி1 ராக்கெட்டாகும். பிஎஸ்எல்வி ரக ராக்கெட்டுகளில் இது 4வது மிஷனாகும்.

1997ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி இந்த ராக்கெட் செலுத்தப்பட்டது. ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. செயற்கைக் கோளும் (ஐஆர்எஸ் 1டி) உரிய முறையில் விடுவிக்கப்பட்டது.

ஆனால் புவி வட்டப் பாதையில் செலுத்துவதற்குப் பதிலாக துருவ வட்டப் பாதையில் செயற்கைக் கோள் போய் விட்டது. ஹீலியம் கசிவு காரணமாக இந்த தவறு நடந்து விட்டது. இதனால் இது பகுதி அளவு தோல்வியான மிஷனாக அறிவிக்கப்பட்டது.

3வது தோல்வி

3வது தோல்வி

இன்று பிஎஸ்எல்வி சி39 ராக்கெட் பகுதி அளவு தோல்வியைச் சந்தித்துள்ளது. இன்றைய தோல்விக்கு காரணம் ராக்கெட்டின் 4வது நிலையான வெப்பத் தடுப்புத் தகடு சரியாக செயல்படாமல் தோல்வி அடைந்ததே முக்கியக் காரணம்.

இதன் காரணமாக 3வது தோல்வியைச் சந்தித்துள்ளது பிஎஸ்எல்வி.

இஸ்ரோ விளக்கம்

இஸ்ரோ விளக்கம்

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் கிரண்குமார், பிஎஸ்எல்வி சி39 ராக்கெட் முதல் 3 கட்டங்களை இயல்பாகவே கடந்தது. 4-வது கட்டத்தில் அதாவது வெப்பத் தகடு பிரிந்து செயற்கை கோள் வெளியே வந்திருக்க வேண்டும். அப்படி வெளியே வந்திருந்தால்தான் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்த முடியும். ஆகையால் இது தோல்வியடைந்துவிட்டது. தோல்விக்கான காரணங்கள் ஆராயப்படும் என கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ISRO's three PSLV Missions was failed.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற