For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

24 மணி நேரம் கடந்தாச்சு.. விமானப்படை விமானம் எங்கே.. களமிறங்கியது இஸ்ரோ

Google Oneindia Tamil News

கவுகாத்தி: அசாமிலிருந்து 13 பேருடன் மாயமான விமானத்தை, இஸ்ரோ செயற்கைகோள்கள் உதவியோடு, தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அசாம் மாநிலம், ஜோர்காட்டிலிருந்து, அருணாச்சல பிரதேச மாநிலத்திற்கு, இந்திய விமானப் படையின், ஏ.என் - 32 ரக விமானம், நேற்று மதியம் சுமார், 12.27 மணிக்கு, புறப்பட்டது.

ISRO satellites join search operations to locate missing AN-32; No success yet

இந்த விமானத்தில், 13 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்ட அரை மணி நேரத்திற்குள், கட்டுப்பாட்டு அறைக்கும், விமானத்துக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது குறித்த தகவல் உடனடியாக, விமானப் படை உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது. சுகோய் - 30 போர் விமானம் உள்ளிட்ட இந்திய விமானப் படை விமானங்கள் தேடுதல் வேட்டைக்கு களமிறக்கப்பட்டன.

இந்நிலையில், மாயமான விமானத்தை மீட்கும் பணியில், இந்திய விண்வெளி ஆய்வு மைப்பான, இஸ்ரோ உதவி நாடப்பட்டுள்ளது. இஸ்ரோ செயற்கைகோள்கள் உதவியுடன், இரு மாநிலங்களிலும் தீவிர தேடுதல் வேட்டை நடக்கிறது. ரிசாட் உள்ளிட்ட செயற்கைக்கோள்கள் இதற்காக பயன்படுத்தப்படுகிறது.

கடற்படையை சேர்ந்த அமெரிக்க தயாரிப்பு பி8ஐ விமானம் உள்ளிட்ட பல விமானங்களும் இன்று முதல் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளன.

English summary
The Indian Air Force (IAF) has reportedly received some unconfimed reports saying that the missing AN-32 may have crashed, but no wreckage has been sighted so far. Search operation to locate the missing IAF AN-32 aircraft is underway.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X