For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

14 நாட்கள் கெடு முடிந்து விட்டது.. விக்ரம் லேண்டருக்கு என்ன ஆச்சு?.. ஆராயும் இஸ்ரோ விஞ்ஞானிகள்

Google Oneindia Tamil News

Recommended Video

    Timeline for Chandrayaan-2 | சந்திரயான்-2 தொடங்கிய நாள் முதல் இன்று வரை முழு தகவல்

    புவனேசுவரம்: விக்ரம் லேண்டருக்கு என்னவாயிற்று என்பதை அறிய தேசிய கல்வியாளர்கள் மற்றும் இஸ்ரோ வல்லுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

    சந்திரயான் 2 விண்கலம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த 7-ஆம் தேதி லேண்டர் நிலவில் தரையிறங்க இருந்தது. ஆனால் 2.1 கி.மீ. உயரத்தில் இருந்த போது இஸ்ரோவுடனான இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    ISRO Sivan says that his team is reviewing about Vikram Lander with National educationist

    இந்த நிலையில் லேண்டருடனான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கப்பட்டது. இஸ்ரோவுடன் இணைந்து நாசாவும் இந்த முயற்சியில் ஈடுபட்டது. எனினும் முடியவில்லை.

    இந்த நிலையில் ஒடிஸா தலைநகர் புவனேசுவரத்தில் ஐஐடி பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் சிவன் பங்கேற்றார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    மோடியை வைத்து ''அரசியல்'' செய்யும் டிரம்ப்.. ஹவுடி மோடிக்கு ஓகே சொன்னது ஏன்? ஷாக்கிங் காரணம்!மோடியை வைத்து ''அரசியல்'' செய்யும் டிரம்ப்.. ஹவுடி மோடிக்கு ஓகே சொன்னது ஏன்? ஷாக்கிங் காரணம்!

    அப்போது அவர் கூறுகையில் சந்திரயான்-2 விண்கலம் 98 சதவீதம் வெற்றி பெற்றிருக்கிறது. இப்படி நாங்கள் கூறுவதற்கு 2 காரணங்கள் உண்டு. ஒன்று அறிவியல், மற்றொன்று தொழில்நுட்பம். தொழில்நுட்பத்தை காட்டுவதில் வெற்றி சதவீதம் கிட்டத்தட்ட முழுமையானது.

    எதிர்கால திட்டம் குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை. 2021-ஆம் ஆண்டு இந்தியர் ஒருவர் விண்வெளிக்குச் செல்வார். விக்ரம் லேண்டருக்கு என்ன நடந்தது என்பது குறித்து தேசிய அளவிலான கல்வியாளர்களையும் இஸ்ரோ வல்லுநர்களையும் கொண்ட குழு ஆராய்ந்து வருகிறது என்றார்.

    English summary
    ISRO Chairman K.Sivan says in Bhuvaneshwaram that his team is reviewing about Vikram Lander with National level educationists.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X