For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப திட்டம்.. இஸ்ரோவின் முதல் கேப்ஸ்யூல் டெஸ்டே சூப்பர் வெற்றி

விண்வெளியில் இருந்து மனிதர்களை பூமிக்கு கொண்டு வர உதவும் கேப்ஸ்யூல் வசதியை இந்தியாவின் இஸ்ரோ சிறப்பாக செய்து முடித்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் திட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி- வீடியோ

    டெல்லி: விண்வெளியில் இருந்து மனிதர்களை பூமிக்கு கொண்டு வர உதவும் கேப்ஸ்யூல் வசதியை இந்தியாவின் இஸ்ரோ சிறப்பாக செய்து முடித்துள்ளது. இந்த சோதனையில் இந்தியா வென்றுள்ளது.

    இந்த வருடம் செய்யப்படுவதில் பெரிய திட்டம் என்றால் அது சந்திராயன் திட்டம்தான். சந்திராயன் திட்டம் ஒன்று வெற்றி அடைந்ததை அடுத்து தற்போது சந்திராயன் திட்டம் இரண்டு செயல்படுத்தப்பட உள்ளது.

    இந்த நிலையில் அந்த திட்டத்திற்கு முன்பு ஸீரோ வேறொரு பெரிய சோதனையில் வென்றுள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியின் முதல் டெஸ்டில் பாஸாகி இருக்கிறது.

    மனிதர்கள்

    மனிதர்கள்

    இது வரையில் இஸ்ரோ பல அல்ட்டிமேட் ஆராய்ச்சிகளை செய்து இருந்தாலும் விண்வெளிக்கு ஒருமுறை கூட மனிதர்களை அனுப்பியதில்லை. அதற்கான சோதனைகளையும் பெரிய அளவில் செய்தது இல்லை.ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ கூறியது.

    கேப்ஸ்யூல் என்றால் என்ன

    கேப்ஸ்யூல் என்றால் என்ன

    இது போல மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டங்களில் கேப்ஸ்யூல் ஒன்று பயன்படுத்தப்படும். விண்வெளியில் இருந்து திரும்ப வரும் போது, பூமியில் இறங்குவதற்கு இந்த கேப்ஸ்யூல்தான் உதவும். அதேபோல் இங்கிருந்து வெளியே செல்லும் ராக்கெட் பிரச்சனைக்கு உள்ளானாலும் இந்த கேப்ஸ்யூல் மூலம்தான் தப்பிக்க முடியும். எல்லா காலநிலையையும் சமாளிக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டு இருக்கும்.

    இஸ்ரோ

    இஸ்ரோ

    இந்த நிலையில் இதை உருவாக்க இருப்பதாக இஸ்ரோ இரண்டு வருடங்களுக்கு முன்பு கூறியது. அதேபோல் தற்போது வெற்றிகரமாக இதை உருவாக்கி உள்ளது. இந்த கேப்ஸ்யூலுக்கு பெயர் வைக்கப்படவில்லை. இது முழுக்க ,முழுக்க இஸ்ரோவின் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கேப்ஸ்யூல் ஆகும். இதை தற்போது வெற்றிகரமாக சோதனை செய்தும் முடித்து இருக்கிறார்கள்.

    என்ன நடந்தது

    என்ன நடந்தது

    இந்த ராக்கெட் கேப்ஸ்யூல் முழுக்க முழுக்க பூமிக்கு வெளியே அனுப்பப்படவில்லை. பூமியில் இருந்து ராக்கெட் மூலம் 2.5 கிலோ மீட்டருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதன் பின் தனியாக கழற்றிவிடப்பட்டுள்ளது. பின் பூமிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த கேப்ஸ்யூல் அரபிக்கடலில் மிதந்து கொண்டுள்ளது.

    English summary
    ISRO tests its first crew escape capsule model successfully. It may help ISRO to send human to space in future.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X