For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேலைவாய்ப்பு, கல்வி & ஆரோக்கிய பிரச்சனைகள் தெளிவாக தெரிகின்றன... பிரியங்கா காந்தி பேச்சு

Google Oneindia Tamil News

அமேதி: வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் ஆரோக்கியம் போன்ற பிரச்சனைகள் தெளிவாக தெரிகின்றன என்று உத்தரபிரதேசம் (கிழக்கு) காங்கிரஸ் கட்சியின் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதுவரை மூன்று கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. நாளை, 4-வது கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதில் மத்தியப்பிரதேசம் மாநிலம் முதல்வர் கமல்நாத் மகன் நகுல் நாத் போட்டியிடும் சிந்த்வாரா தொகுதி உள்பட பீகார் (5), ஜம்மு காஷ்மீர் (1), ஜார்க்கண்ட் (3), மத்தியப்பிரதேசம் (6), மகாராஷ்டிரா (17), ஒடிசா (6), ராஜஸ்தான் (13), உத்தரபிரதேசம் (13), மேற்கு வங்கம் (8) உள்ளிட்ட மாநிலங்களில் 71 தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் 6 மணியுடன் நிறைவு பெற்றது.

Issues are clear; employment, education & health Says Priyanka Gandhi Vadra

இதனையொட்டி, அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்று அமேதி தொகுதியில் பிரியங்கா காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பணம், புடவை மற்றும் காலணிகள் கொடுத்து போட்டியிடுவது தவறான வழி என்றார்.

அமேதி மக்கள் ஒரு போதும், யாரிடமும் கையேந்த மாட்டார்கள். நான் 12 வயதில் இருந்து இங்கே வருகிறேன் என்றும், அமேதி மற்றும் ரேபரலிக்கு பெருமைகள் அதிகம் என்றும் கூறினார். பிரச்சனைகள் தெளிவாக தெரிகின்றன; வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் ஆரோக்கியம் போதிய அளவு இல்லை என்றும், தேசியவாதத்தில், மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றும் கூறினார்.

நீங்க உயர் சாதி தான் மாயாவதி புகார்.. இல்லை நான் பிற்படுத்தப்பட்டவன் தான் என கூறும் மோடி நீங்க உயர் சாதி தான் மாயாவதி புகார்.. இல்லை நான் பிற்படுத்தப்பட்டவன் தான் என கூறும் மோடி

மக்களின் பிரச்சனைகளை பாஜக அரசு கேட்கவில்லை, அவர்கள் தங்களது பிரச்சினை குறித்து குரல் கொடுத்தால், ஒடுக்கப்படுகிறார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டினார். இது ஜனநாயகமா எனவும் கேள்வி எழுப்பினார்.

English summary
Priyanka Gandhi Vadra: employment, education & health. Nationalism is to solve problems of people. it's neither democracy nor nationalism
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X