For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடக பந்த்.. தமிழ் டிவி சேனல்கள் முடக்கம்.. ஐடி நிறுவனங்களுக்கு லீவு #TNNeedsKaveri

By Arivalagan
Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடக பந்த் காரணமாக பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் 6 மணிவரை தியேட்டர்கள் மூடப்பட்டன. தமிழ் டிவி சேனல்கள் முடக்கப்பட்டன. பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட நகரங்களில் தகவல் தொழில்நுட்ப நகரங்களுக்கு விடுமுறை விடப்பட்டது.

 IT firms shut in Karnataka

காவிரியில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவதைக் கண்டித்து பல்வேறு கன்னட அமைப்புக் கர்நாடக பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு ஆளும் காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. அதன்படி இன்று காலை பந்த் தொடங்கியது.

பெங்களூரு: கர்நாடக பந்த் காரணமாக பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் 6 மணிவரை தியேட்டர்கள் மூடப்பட்டன. தமிழ் டிவி சேனல்கள் முடக்கப்பட்டன. பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட நகரங்களில் தகவல் தொழில்நுட்ப நகரங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. காவிரியில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவதைக் கண்டித்து பல்வேறு கன்னட அமைப்புக் கர்நாடக பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு ஆளும் காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. அதன்படி இன்று காலை பந்த் தொடங்கியது. நேற்றிரவு முதலே பெங்களூரு நகரம் வெறிசோடியது. கேஆர். மார்க்கெட், யஷ்வந்த்பூர் மார்க்கெட், கலாசிபாளையம் ஆகிய பகுதிகள் கடைகள் அடைக்கப்பட்டன. பேருந்துகள் ஆட்டோக்கள் ஓடாததால் இயல்பு வாழ்க்கை முடங்கின. 6 மணிக்கு மேல் கடைகள் திறக்கப்பட்டு, பேருந்துகள் இயங்கின. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் அவை மூடப்பட்டன. பல நிறுவனங்களில் ஊழியர்கள் வீடுகளிலிருந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர். எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டன. இதுகுறித்து எலக்ட்ரானிக் சிட்டி செய்தித் தொடர்பாளர் கூறுகையில் ஒரு நிறுவனமும் இன்று திறக்கப்படவில்லை. அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விப்ரோ நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இன்று விடுமுறை அறிவித்துள்ளது. அதேசமயம், செப்டம்பர் 10ம் தேதி அதாவது நாளைக்கு நிறுவனம் செயல்படும் என்றும் விப்ரோ அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட உள்ளூர் விடுமுறை போல பல நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இன்போசிஸ் நிறுவனம் இன்று செயல்படாது என்றும் அதற்குப் பதில் செப்டம்பர் 18ம் தேதி செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் தியேட்டர்கள் இயங்கவில்லை. தமிழ்ப் படங்களை திரையிடுவதை ஏற்கனவே நிறுத்தி வைத்து விட்டனர். இன்று ஒரு தியேட்டரும் திறக்கப்படவில்லை. 6 மணிக்கு மேல் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. தமிழ் டிவி சேனல்களையும் கன்னட அமைப்பினரின் மிரட்டல் காரணமாக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் முடக்கினர். இதனால் டாடா ஸ்கை போன்ற டிஷ் ஆன்டனா சர்வீஸை வைத்திருப்பவர்கள் மட்டுமே தமிழ் சானல்களைப் பார்க்க முடிந்தது. கேபிள் டிவி மூலம் பார்ப்போருக்கு தமிழ் டிவி சானல்கள் கிடைக்கவில்லை. 6 மணிக்கு மேல் பந்த் முடிந்த பின்னர் மாநிலம் முழுவதும் இயல்பு நிலை திரும்பியது.

நேற்றிரவு முதலே பெங்களூரு நகரம் வெறிசோடியது. கேஆர். மார்க்கெட், யஷ்வந்த்பூர் மார்க்கெட், கலாசிபாளையம் ஆகிய பகுதிகள் கடைகள் அடைக்கப்பட்டன. பேருந்துகள் ஆட்டோக்கள் ஓடாததால் இயல்பு வாழ்க்கை முடங்கின. 6 மணிக்கு மேல் கடைகள் திறக்கப்பட்டு, பேருந்துகள் இயங்கின. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் அவை மூடப்பட்டன. பல நிறுவனங்களில் ஊழியர்கள் வீடுகளிலிருந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 IT firms shut in Karnataka

எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டன. இதுகுறித்து எலக்ட்ரானிக் சிட்டி செய்தித் தொடர்பாளர் கூறுகையில் ஒரு நிறுவனமும் இன்று திறக்கப்படவில்லை. அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விப்ரோ நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இன்று விடுமுறை அறிவித்துள்ளது. அதேசமயம், செப்டம்பர் 10ம் தேதி அதாவது நாளைக்கு நிறுவனம் செயல்படும் என்றும் விப்ரோ அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட உள்ளூர் விடுமுறை போல பல நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இன்போசிஸ் நிறுவனம் இன்று செயல்படாது என்றும் அதற்குப் பதில் செப்டம்பர் 18ம் தேதி செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் தியேட்டர்கள் இயங்கவில்லை. தமிழ்ப் படங்களை திரையிடுவதை ஏற்கனவே நிறுத்தி வைத்து விட்டனர். இன்று ஒரு தியேட்டரும் திறக்கப்படவில்லை. 6 மணிக்கு மேல் தியேட்டர்கள் திறக்கப்பட்டன.

cauvery bandh

தமிழ் டிவி சேனல்களையும் கன்னட அமைப்பினரின் மிரட்டல் காரணமாக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் முடக்கினர். இதனால் டாடா ஸ்கை போன்ற டிஷ் ஆன்டனா சர்வீஸை வைத்திருப்பவர்கள் மட்டுமே தமிழ் சானல்களைப் பார்க்க முடிந்தது. கேபிள் டிவி மூலம் பார்ப்போருக்கு தமிழ் டிவி சானல்கள் கிடைக்கவில்லை. 6 மணிக்கு மேல் பந்த் முடிந்த பின்னர் மாநிலம் முழுவதும் இயல்பு நிலை திரும்பியது.

English summary
Almost all the IT firms have been shut in Bangaluru, Mysuru due to the Karnataka Bandh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X