For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரியில் தமிழகத்திற்கு நீர் குறைக்கப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது.. முதல்வர் பழனிசாமி அறிக்கை

காவிரியில் தமிழகத்திற்கு நீர் குறைக்கப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

பெங்களூர்: காவிரியில் தமிழகத்திற்கு நீர் குறைக்கப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. இதுகுறித்து தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

It is disappointing that water is reduced to TN in Cauvery- TN CM

அதில் '' காவிரியில் தமிழகத்திற்கு நீர் குறைக்கப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது. காவிரி நதிநீரின் மீது தமிழகத்திற்கே அதிக உரிமை உள்ளது.'' என்றுள்ளார்.

மேலும் ''கீழ்பாசன மாநிலத்தின் உரிமை அடிப்படையில் தமிழகத்திற்கே முன்னுரிமை. காவிரி தீர்ப்பில் தமிழகத்துக்கு சாதகமான அம்சங்களும் உள்ளது. '' என்றுள்ளார்.

மேலும் ''அரசை குறை கூறும் நோக்கிலேயே எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டது தமிழக அரசுக்கு வெற்றி '' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

காவிரி தேசிய சொத்து என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. திமுக ஆட்சிக்காலத்தில்தான் தமிழ்நாடு உரிமையை இழந்திருக்கிறது. காவிரி வழக்கில் இறுதி தீர்ப்பை ஆராய்ந்து சட்ட வல்லுநர்களின் ஆலோசனையை பெற்று நடவடிக்கை'' என்றுள்ளார்.

English summary
It is disappointing that water is reduced to TN in Cauvery says Tamil Nadu CM Edappadi Palanisamy. He says that Cauvery verdict in a injustice to Tamil people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X