For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை: சோனியா காந்தி

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் சிறுபான்மையினர் மிகவும் பாதுகாப்பாக உள்ளதாகவும் அவர்களுக்கு மத்திய அரசு பல்வேறு நல திட்ட உதவிகளை செய்து வருவதாகவும், மேலும் அவர்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை எனவும் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி.

தேசிய வக்ப் மேம்பாட்டு கழத்தின் திறப்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டார்.

It is government's duty to protect minorities: Sonia Gandhi

அப்போது அவர் கூறியதாவது:

அரசாங்கத்தின் கடமை:

இந்திய நாடு இந்திய கலச்சாரத்தில் வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நாடு.சிறுபான்மையினரை காப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.அவர்களது உரிமைகளையும் உடமைகளையும் பாதுகாப்பது அரசின் நோக்கம் ஆகும்.இதை சிறுபான்மையினர் உணரவேண்டும்.

முன்னேற்றம்:

இந்தியாவில் முஸ்லீம்களின் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தேசிய வக்ப் மேம்பாட்டு கழகம் செய்துவருகிறது.முஸ்லீம் மக்களுக்கு பல்வேறு நலதிட்டங்களை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிறைவேற்றி வருகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு சிறுபான்மையினர் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருகிறது என்றால் மிகையாகது.

நேர்மையான அறிகுறிகள்:

சச்சார் கமிட்டி பரிந்துரைகள் படி நடைமுறைபடுத்துவதன் மூலம் நேர்மையான அறிகுறிகளை பார்க்க முடியும்.

பத்து மடங்கு உயர்வு:

மேலும், மத்திய அரசு இந்தியாவில் சிறுபான்மையினரின் வளர்ச்சிக்காக முயற்சிகள் மேன்மேலும் தொடரும், கடந்த பத்து ஆண்டுகளில் சிறுபான்மையினரின் வளர்ச்சி மற்றும் மேம்பாடிற்க்காக திட்டங்கள் அனைத்தும் பத்து மடங்காக உயர்ந்துள்ளது.

ஆதரவு தேவை:

சிறுபான்மையினரின் வளர்ச்சி சம பங்கு கிடைக்கும் வரை காங்கிரஸ் அரசு தொடர்ந்து பாடுபடும் என்றும்,அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த சிறுபான்மையினரின் ஆதரவு தேவை' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Congress president and UPA chairperson Sonia Gandhi on Wednesday reiterated that the minorities in India should feel safe and secure, and added that it is the duty of the government to protect them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X