For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லி 11 பேர் மர்ம மரணம்.. அப்பாவின் ஆவியால் நேர்ந்த கொடூரம்.. 3 மாதத்திற்கு பின் விலகிய மர்மம்!

டெல்லியில் 11 பேர் இறந்த வழக்கில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    3 மாதம் தொடர்ந்த மர்மம்...டெல்லி புராரி வழக்கு முடித்துவைப்பு- வீடியோ

    டெல்லி: டெல்லியில் 11 பேர் இறந்த வழக்கில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கை மொத்தமாக டெல்லி போலீஸ் முடித்து வைத்துள்ளது.

    இந்த வழக்கு முடிந்தாலும் பல முக்கிய கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்காமல் உள்ளது. கடந்த ஜூன் மாதம் 6ம் தேதி டெல்லி புராரி பகுதியில் ஒரு வீட்டிலிருந்து 11 பிணங்கள் கண்டெடுக்கப்பட்டது.

    அந்த வீட்டில் போலீஸ் விசாரணையில் நிறைய கடிதங்கள், டைரிக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. எப்படி தற்கொலை செய்தால் மோட்சம் கிடைக்கும் என்று குறிப்புகள் இதில் இருந்தது. இந்த விசாரணை கடந்த மூன்று மாதமாக நடந்தது.

    11 பேர் இறந்து கிடந்தனர்

    11 பேர் இறந்து கிடந்தனர்

    டெல்லியின் புராரி பகுதியில் உள்ள அந்த வீட்டிலிருந்து 11 பிணங்கள் கண்டெடுக்கப்பட்டது. அந்த வீட்டில் உள்ளே 11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். அவர்களின் கண்களும் வாய்களும் துணிகளால் கட்டப்பட்டு இருந்தது. மொத்தம் 7 பெண்கள் மற்றும் 4 ஆண்களின் சடலங்கள் அந்த வீட்டில் இருந்துள்ளது. இதில் ஒருவர் மூதாட்டி. அவர் மட்டும் கழுத்தை நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

    மத சடங்கு

    மத சடங்கு

    இது கொலையா அல்லது தற்கொலையா என போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். எதோ ஒரு மத சடங்கிற்காக இவர்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதை வைத்து போலீஸ் தீவிரமாக விசாரித்து வந்தது. அங்கு இருந்த கடிதங்கள் இதைத்தான் எல்லோருக்கும் சொன்னது.

    வீட்டில் இருந்த ஆவி

    வீட்டில் இருந்த ஆவி

    அங்கு இருந்த டைரி குறிப்புகளில், புராரியின் இறந்து போன தந்தை தினமும் அவரிடம் என்ன பேசுகிறார் என்ற குறிப்புகள் இருந்துள்ளது. அதில் ''நீ இந்த சாகும் சடங்கை செய்தால்தான் என் ஆத்மா சாந்தி அடையும். உங்களுக்கும் மோட்சம் கிடைக்கும். என்னுடன் 5 ஆவி இருக்கிறது. நீ ஹரித்வார் போக வேண்டாம். இந்த சடங்கை வீட்டில் செய்தால் எல்லாருக்கும் மோட்சம் கிடைக்கும்'' என்றுள்ளது.

    நிறைய குறிப்புகள்

    நிறைய குறிப்புகள்

    மேலும் டைரி குறிப்பில், இறந்த முதியவரிடம் பதில் சொல்லும் விதமாக '' இங்கே எல்லாம் நன்றாக செல்கிறது. குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் சடங்கிற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார்கள். விரைவில், சடங்கை வெற்றிகரமாக செய்யலாம். நாங்கள் விரைவில் மோட்சம் அடைவோம். சடங்கிற்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டோம்'' என்று குறிப்புகள் உள்ளது.

    குழாய்கள்

    குழாய்கள்

    இந்த நிலையில் இந்த சம்பவத்தில் மிகவும் வித்தியாசமான விஷயம் ஒன்றும் நடந்தது. அந்த வீட்டில் சோதனை நடத்திய போலீஸ், வீட்டிற்கு பின் புறத்தில் 11 குழாய்கள் வெளியே வருவதை கண்டுபிடித்தனர். மொத்தமாக 11 குழாய்கள் வெளியே வந்து இணைப்பு இல்லாமல் முடிந்துள்ளது. அதேபோல் 11 டைரிகள் தனித்தனியாக கண்டுபிடிக்கப்பட்டது.

    3 மாதமாக இருந்த குழப்பம்

    3 மாதமாக இருந்த குழப்பம்

    இந்த குழாய்கள் உள் பக்கம் எதனுடனும் இணைக்கப்படவில்லை. அதேபோல் வெளியேவும் எதனுடனும் இணைக்கப்படவில்லை. இந்த மரணம் எதற்கு என்று தெரியவில்லை. உண்மையில் ஆவி இருக்கிறதா என்று தெரியவில்லை. இது என்ன மதச்சடங்கு என்று தெரியவில்லை. இப்படி நிறைய ''தெரியவில்லை'' டெல்லி போலீசை குழப்பத்திற்கு உள்ளாக்கியது.

    தெளிவு

    தெளிவு

    இந்த நிலையில் தற்போது இவர்களின் முழுமையான உடற்கூறு ஆய்வு வெளியாகி உள்ளது. அதன்படி இவர்கள் கொல்லப்படவில்லை. இவர்கள் தற்கொலை செய்து இருக்கிறார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், இவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்று கூறப்படவில்லை. மேலும், அந்த குடும்பத்தின் தலைவருக்கு மனநல பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளனர்.

    வழக்கு முடித்து வைப்பு

    வழக்கு முடித்து வைப்பு

    இதனால் இந்த வழக்கு தற்போது தற்கொலை என்று முடித்து வைக்கப்பட்டுள்ளது. 3 மாதமாக நடந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. மனநல பிரச்சனை காரணமாக அந்த குடும்பத்தின் தலைவர், மற்ற உறுப்பினர்களின் மனதை மாற்றி இப்படி தற்கொலை செய்ய வைத்துள்ளார் என்று வழக்கை முடித்து வைத்து இருக்கிறார்கள்.

    ஆனாலும் சில கேள்விகள்

    ஆனாலும் சில கேள்விகள்

    ஆனாலும் சில கேள்விகளுக்கு இதில் பதில் கிடைக்கவில்லை. இந்த வழக்கில் கீதா என்று சாமியார் கைதானார். அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. இது என்ன மத சடங்கு என்று கண்டுபிடிக்கப்படவில்லை. இவர்களின் மரணத்திற்கு இதுதான் காரணமா என்றும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதில் இன்னும் பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை.

    English summary
    It is a Suicide, Delhi police closed the mysterious Purari death case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X