For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவில் முதலீடு செய்ய இதுதான் சரியான நேரம்.. டாவோஸ் பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி அழைப்பு

Google Oneindia Tamil News

டாவோஸ்: இந்தியாவின் பொருளாதாரம் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டு இருக்கிறது, இந்தியாவில் முதலீடு செய்ய இதுதான் சரியான நேரம் என்று பிரதமர் மோடி டாவோஸ் மாநாட்டில் பேசி இருக்கிறார்.

சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரத்தில் வருடம் தோறும் உலக பொருளாதார மாநாடு நடப்பது வழக்கம். டாவோஸ் மாநாடு என்று அழைக்கப்படும் இந்த கூட்டத்தில் உலக நாட்டு அதிபர்கள், பிரதமர்கள் உரை நிகழ்த்துவார்கள். 5 நாட்கள் நடக்கும் இந்த மாநாடு கடந்த வருடம் நடைபெறவில்லை.

கொரோனா காரணமாக நடத்த வருடம் நடக்காத இந்த மாநாடு இன்று ஆன்லைன் வழியாக நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங், ஐநா பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ் ஆகியோர் உரையாற்றினார்கள்.

எதிர்பாராத ட்விஸ்ட்.. சென்னை உட்பட 11 மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு.. துணிச்சலான முடிவு!எதிர்பாராத ட்விஸ்ட்.. சென்னை உட்பட 11 மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு.. துணிச்சலான முடிவு!

பிரதமர் மோடி உரை

பிரதமர் மோடி உரை

உலக பொருளாதார மன்ற மாநாட்டில் பிரதமர் மோடி நிகழ்த்திய உரையில், உலக நாடுகளுக்கு இந்தியா நம்பிக்கையின் பூங்கொத்தாக மாறியுள்ளது. ஜனநாயகம் மீதான நம்பிக்கையை, தொழில்நுட்பம் மீதான நம்பிக்கையை, திறமை மீதான நம்பிக்கையை உலக நாடுகளுக்கு இந்தியா எடுத்துரைத்துள்ளது. கொரோனா காலத்தில் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி இருக்கிறோம்.

இந்தியா மூன்றாம் அலை

இந்தியா மூன்றாம் அலை

இந்தியாவில் தற்போது மூன்றாம் அலை நடந்து கொண்ட இருக்கிறது. இதில் இருந்தும் நாங்கள் மீண்டும் வருவோம். இந்தியா சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. வளர்ச்சிக்கான பாதையில் நாம் முன்னேறி சென்று கொண்டு இருக்கிறோம். உலக நாடுகள், உலக நாட்டு தலைவர்கள் நம்மை பாராட்டி வருகிறார்கள். இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக முன்னேறுவதாக உலக நாட்டு பொருளாதார வல்லுனர்கள் பாராட்டி உள்ளனர்.

இந்தியா கொரோனா

இந்தியா கொரோனா

இந்தியாவில் ஒரே வருடத்தில் 160 டோஸ் கொரோனா வேக்சின் போடப்பட்டுள்ளது. உலக நாடுகளுக்கு இது நம்பிக்கை கொடுத்துள்ளது. கொரோனாவிற்கு இடையிலும் இந்தியாவின் பொருளாதாரம் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. ஒரே உலகம், ஒரே ஆரோக்கியம் என்ற அடிப்படையில் உலக நாடுகள் அனைத்திற்கும் இந்தியா உதவிகொண்டு இருக்கிறது.

இந்தியா மருந்து

இந்தியா மருந்து

உலக நாடுகளுக்கும் இந்தியா மருந்துகளை அனுப்பியது. உலக நாடுகளின் மருத்துவமனையாக இந்தியா உருவெடுத்துள்ளது. உலக நாடுகளின் நம்பிக்கையை இந்தியா ஈன்றெடுத்து உள்ளது. இந்தியாவின் தொழில்நுட்ப துறையும், கணினி துறையும் இந்த காலகட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. டிஜிட்டல் புரட்சியை நோக்கி இந்தியா சென்று கொண்டு இருக்கிறது. இந்தியாவில் முதலீடு செய்வது எளிதாகக் காரியமாக உருவெடுத்து வருகிறது.

முதலீடு மோடி

முதலீடு மோடி

இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாட்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும். இந்தியாவில் முதலீடு செய்ய இதுதான் உகந்த நேரம். இந்தியாவில் மாபெரும் இளைஞர் சக்தி இருக்கிறது. 2014ல் இந்தியாவில் வெகு சில தொழில் முனைவோர்கள் இருந்தனர். ஆனால் இப்போது இந்திகாவில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்டார்ட் அப்கள் உள்ளன.

யுனிகார்ன் திட்டங்கள்

யுனிகார்ன் திட்டங்கள்

இந்தியாவில் 80க்கும் அதிகமான யுனிகார்ன்கள் உள்ளன. 2021ல் மட்டும் 40 புதிய யுனிகார்ன்கள் உருவாகி உள்ளன. அடுத்த 25 வருடங்களுக்கான தலை சிறந்த திட்டங்கள் இப்போதே இந்தியாவில் உருவாக்கப்பட்டு வருகிறது. நீடித்த, நிலையான வளர்ச்சியை நோக்கி இந்தியா சென்று கொண்டு இருக்கிறது, என்று பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
It is the right time to invest in India says PM Modi in Davos meeting today in Swiss.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X