For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐடி ரெய்டில் சிக்கிய கலர்ஸ்.. நடிகை வீட்டில் ரெய்டு.. பரபரக்கும் சென்னை, ஹைதராபாத்

நடிகை மந்த்ரா வீட்டில் ஐடி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    ரெய்டில் பரபரக்கும் சென்னை, ஹைதராபாத் ! #kolorshealthcare

    சென்னை/ஹைதராபாத்: தென்னிந்தியாவில் புகழ் பெற்ற கலர்ஸ் உடல் எடை குறைப்பு நிறுவனத்தின் கிளைகளில் அதிரடியாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் கிருஷ்ணாவின் உறவினரான நடிகை மந்திரா (தெலுங்கில் ராசி) வீட்டிலும் ரெய்டு நடப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

    ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டது கலர்ஸ் (Kolors ) ஹெல்த்கேர் இந்தியா பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம். இந்த நிறுவனத்திற்கு ஹைதராபாத், சென்னை, கோவை என பல ஊர்களில் கிளைகள் உள்ளன. ஆந்திரா, தெலுங்கானாவிலும் நிறைய கிளைகள் உள்ளன.

     நடிகை மந்திரா

    நடிகை மந்திரா

    நடிகை மந்திரா, ரம்பா உள்ளிட்ட பல நடிகைகளும் இந்த நிறுவனத்திற்கான விளம்பரங்களில் நடித்துள்ளனர். இதன் உரிமையாளர் விஜய் கிருஷ்ணாவின் உறவினர்தான் நடிகை மந்திரா என்று கூறப்படுகிறது. விஜய் கிருஷ்ணாவும், நாகச்சந்திர வெங்கட ராயுடு என்பவரும் சேர்ந்து இதை நடத்துகின்றனர்.

     என்ன புகார்

    என்ன புகார்

    இந்த நிலையில் வரி ஏய்ப்புப் புகாரில் சிக்கிய கலர்ஸ் நிறுவனத்தில் ஐடி அதிகாரிகள் அதிரடி ரெய்டில் ஈடுபட்டுள்ளனர். 4 நாளாக ரெய்டு நடப்பதாக கூறப்படுகிறது. மந்திரா வீட்டிலும் ரெய்டு நடப்பதாக சொல்கிறார்கள். மொத்தம் 50 இடங்களில் ரெய்டு நடக்கிறதாம். இதில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. பணம் சிக்கியதாக தகவல் இல்லை.

     உடல் எடை குறைப்பு

    உடல் எடை குறைப்பு

    2004ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது இந்த கலர்ஸ் நிறுவனம். உடல் எடைக் குறைப்பு, அழகுக் கலை என பல்வேறு பிரிவுகளில் இங்கு வாடிக்கையாளர்களுக்கு சர்வீஸ் செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட 50 கிளைகள் உள்ளனவாம். இங்கு 1500 பேர் பணியாற்றுகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

     சர்ச்சைகள்

    சர்ச்சைகள்

    இந்த நிறுவனம் மீது ஏற்கனவே பல சர்ச்சைகள், புகார்கள் உள்ளன. தவறான முறையில் மக்களை இவர்கள் திசை திருப்புகிறார்கள் என்று கூறி கடந்த பிப்ரவரி மாதம் விஜயவாடா நுகர்வோர் நீதிமன்றத்தில் கலர்ஸ் மீது வழக்குத் தொடரப்பட்டது.

     விளம்பரங்களுக்கு தடை

    விளம்பரங்களுக்கு தடை

    இதையடுத்து நடிகைகள் மந்திரா, ரம்பா ஆகியோரை வைத்து தவறான தகவல்களைக் கூறி விளம்பரங்களை ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    IT searches on Kolors in hyderabad, chennai and actress and the house of actress Mantra in hyderabad
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X