For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒருபக்கம் காங். ஆட்சிக்கு சிக்கல்.. இன்னொரு பக்கம் வருமானவரி சோதனை.. ராஜஸ்தானில் அதிரடி திருப்பம்

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜீவ் அரோரா அலுவலகத்தில் சோதனை நடந்து வருகிறது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் அசோக் கெஹ்லட்டிற்கு எதிராக துணை முதல்வர் சச்சின் பைலட் அதிருப்தி தெரிவித்து உள்ளார். இவர் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் உடன் டெல்லியில் முகாமிட்டு இருக்கிறார். இவருக்கு 30 எம்எல்ஏக்கள் வரை ஆதரவு அளிப்பதாக கூறப்படுகிறது.

IT raids in many places close Congress officials in Rajasthan as Pilot goes rebel

இதனால் அங்கு காங்கிரஸ் கட்சியின் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முதல்வர் அசோக் கெஹ்லட் ஆட்சி கவிழ வாய்ப்புள்ளது. சச்சின் பைலட் பாஜகவில் சேர வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

இந்த நிலையில்தான் தற்போது ராஜஸ்தானில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜீவ் அரோரா அலுவலகத்தில் சோதனை நடந்து வருகிறது. இவருக்கு சொந்தமான அமரபள்ளி அலுவலகத்திலும் வருமானவரித்துறை சோதனை நடந்து வருகிறது.

அதேபோல் இவரின் நண்பர்கள் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரசுக்கு நெருக்கமாக இருக்கும் நபர்களின் வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை நடந்து வருகிறது. டெல்லி, மகாராஷ்டிரா, மும்பையில் சில இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லட்டிற்கு ராஜீவ் அரோரா மிகவும் நெருக்கமான நபர் என்று கூறப்படுகிறது. அங்கு ஆட்சி கவிழும் நிலை இருக்கும் போது இப்படி வருமான வரித்துறை சோதனை நடப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
IT raids in many places close Congress officials in Rajasthan as Pilot goes rebel against Congress government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X