For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எஸ்.எம்.கிருஷ்ணா மருமகன், 'காபி டே' நிறுவன உரிமையாளர் சித்தார்த்தா நிறுவனத்தில் ஐடி ரெய்டு

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மருமகனும் கபே காபி டே நிறுவன உரிமையாளருமான சித்தார்த்தா வீடு மற்றும் அலுவலகங்களில் ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது.

பெங்களூர், சென்னை, மும்பை, சிக்மகளூரிலுள்ள சித்தார்த்தாவுக்கு தொடர்புள்ள 20 இடங்களில் ஒரே நேரத்தில் இன்று ஐடி அதிகாரிகள் ரெய்டில் ஈடுபட்டு வருகிறார்கள்.

IT raids on SM Krishna's son in law VG Siddhartha firm

இந்தியாவின் பல்வேறு நகரங்கள் மட்டுமல்லாது, பராகுவே, வியன்னா, மலேசியா நாடுகளிலும் மொத்தம் 1550க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ள கபே காபி டே நிறுவனத்தின் உரிமையாளர் சித்தார்த்தா. கிருஷ்ணாவின் மூத்த மகள் மாளவிகாவை இவர் திருமணம் செய்துள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசின் முதல்வராக விளங்கி ஐடி துறையில் பெரும் புரட்சியை உருவாக்கியவர் எஸ்.எம்.கிருஷ்ணா. இதன்பிறகு மன்மோகன்சிங் தலைமையிலான அமைச்சரவையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தார். மகாராஷ்டிரா ஆளுநராக்கப்பட்டார். ஆனால் கர்நாடகாவில் கடந்த சில வருடங்களாக காங்கிரஸ் கட்சி அவரை புறக்கணித்துவிட்டது. இதையடுத்து இவ்வாண்டு தொடக்கத்தில் கிருஷ்ணா பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Income Tax raids on VG Siddhartha places, who is son-in-law of former Karnataka CM SM Krishna.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X