For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜஸ்தானில் அசோக் கெலாட்டுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் ஐடி ரெய்டு- ரூ12 கோடி ரொக்கம் பறிமுதல்

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு மிக நெருக்கமான நபர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனைகளில் ரூ12 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட், முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சச்சின் பைலட், அவரது ஆதரவு அமைச்சர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

IT Seized Rs 12 Crore in Raids from People Close to Rajasthan CM Gehlot

மேலும் பைலட் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வதற்கான நோட்டீஸும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் புதிய திருப்பமாக முதல்வர் கெலாட்டின் நெருங்கிய சகாக்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென அதிரடி சோதனை நடத்தினர்.

ஹரியானாவில் செம கலாட்டா- ராஜஸ்தான் போலீஸ் பிடியில் இருந்து பைலட் ஆதரவு எம்.எல்.ஏ. கிரேட் எஸ்கேப்ஹரியானாவில் செம கலாட்டா- ராஜஸ்தான் போலீஸ் பிடியில் இருந்து பைலட் ஆதரவு எம்.எல்.ஏ. கிரேட் எஸ்கேப்

அசோக் கெலாட்டின் மகனின் நெருங்கிய நண்பரான ரத்தன் காந்த் ஷர்மா என்பவரது லாக்கரில் இருந்து ரூ5 கோடி ரொக்கத்தை வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் கணக்கில் காட்டப்படாத ரூ1.7 கோடி மதிப்பிலான தங்க நகைகளும் சிக்கின.

இந்த சோதனைகளில் மொத்தம் ரூ12 கோடி ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

English summary
IT Dept had Seized Rs 12 Crore in Raids from People Close to Rajasthan CM Gehlot.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X