For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிலிர்க்க வைக்கும் பயணம்- மலையில் இருந்து 40 கிமீ தூரம்-காயம்பட்ட பெண்ணை சுமந்து வந்த ராணுவ வீரர்கள்

Google Oneindia Tamil News

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மலைப் பகுதி கிராமத்தில் காயமடைந்த பெண் ஒருவரை இந்தோ திபெத் படை வீரர்கள் 40 கிமீ தூரம், சுமார் 15 மணிநேரம் நடைபயணமாக ஸ்ட்ரெச்சரில் வைத்து தூக்கி வந்த சம்பவம் நெகிழ வைத்துள்ளது.

Recommended Video

    மலையில் இருந்து 40 கிமீ தூரம்- காயம்பட்ட பெண்ணை சுமந்து வந்த ராணுவ வீரர்கள் - வீடியோ

    உத்தரகண்ட் மாநிலத்தில் லாப்சா என்பது மலைப்பகுதியில் உள்ள குக்கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 20-ந் தேதி பெண் ஒருவர் படுகாயமடைந்தார்.

    ITBP Jawans Carry Injured Woman For 15 Hours On Foot To Nearest Hospital

    அவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக ராணுவ ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது. ஆனால் அங்கு நிலவிய மோசமான வானிலையில் ஹெலிகாப்டரால் தரை இறங்க முடியவில்லை.

    இதனால் மிலாம் ராணுவ முகாமில் இருந்து இந்தோ திபெத் படை வீரர்கள் அந்த கிராமத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். படுகாயமடைந்த பெண்ணை ஸ்ட்ரெச்சரில் வைத்து சுமார் 40 கி.மீ தூரம் நடைபயணமாக தூக்கி வந்தனர் இந்தோ திபெத் படைவீரர்கள்.

    ITBP Jawans Carry Injured Woman For 15 Hours On Foot To Nearest Hospital

    செங்குத்தான மலைப்பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் ஆறுகள், நிலச் சரிவு அபாயம் உள்ள பகுதிகளைக் கடந்து அந்த பெண்ணை இந்தோ திபெத் படைவீரர்கள் சுமையாகவே தூக்கி வந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

    தெற்கு vs வடக்கு.. மூத்த தலைகளுக்கு இடையே கடும் போட்டி.. காங்கிரசின் வருங்கால தேசிய தலைவர் யார்?தெற்கு vs வடக்கு.. மூத்த தலைகளுக்கு இடையே கடும் போட்டி.. காங்கிரசின் வருங்கால தேசிய தலைவர் யார்?

    இந்தோ திபெத் பாதுகாப்புப் படை வீரர்களின் இந்த சிலிர்க்க வைக்கும் மனித நேய பயணம் அனைவரையும் நெகிழவும் வைத்திருக்கிறது.

    English summary
    Indo-Tibetan Border Police jawans on Saturday rescued an injured woman in a remote Uttrakhand village, carrying her on a stretcher for 15 hours through flooded drains.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X