For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு உதவும் ஐடிஎம் குழுமம்-கோட்டக் கல்வி அறக்கட்டளை

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: பிற்படுத்தப்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் நலனை கருதி ஐடிஎம் குழுமம் கோட்டக் மஹிந்திரா வங்கியின் கோட்டக் கல்வி

அறக்கட்டளையுடன்(கேஇஎஃப்) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு நல்ல கல்வி அளிப்பதே அந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் ஆகும். கோட்டக் கல்வி அறக்கட்டளை மாணவர்கள் ஐடிஎம் குழுமத்தின் மும்பை, பரோடா மற்றும் ராய்பூர் கல்வி நிறுவனங்களில் படிக்க முழு ஸ்காலர்ஷிப் அளிக்கிறது ஐடிஎம்.

ITM-Group and Kotak Education Foundation to provide free education

பதிலுக்கு ஐடிஎம் குழுமத்தில் படிக்கும் திறமையான மாணவர்கள் மேல் படிப்பு படிக்க கோட்டக் கல்வி அறக்கட்டளை உதவும்.

இது குறித்து ஐடிஎம் குழும சிஇஓ நிதின் கூறுகையில்,

கோட்டக் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது எங்களுக்கு கிடைத்த கவுரவம். பணம் இல்லாத காரணத்தால் படிக்க முடியாமல் இருக்கும் மாணவர்களுக்கு உதவ அனைத்து முயற்சியும் செய்வோம் என்றார்.

இது பற்றி கோட்டக் பிரதிநிதி கூறுகையில்,

கல்வி தான் நம் நாட்டின் தூண். அப்படி இருக்கும்போது குழந்தைகளுக்கு கல்வி வழங்கும் ஐடிஎம்முக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்றார்.

இந்த ஒப்பந்தத்தின்படி 13 மாணவர்களுக்கு பி.இ., நர்சிங், பி.எஸ்.சி. ஆப்டோமெட்ரி, இன்டீரியர் டிசைன் மற்றும் மெடிக்கல் லேப் டெக்னீஷியன் படிப்பு படிக்க ஸ்காலர்ஷிப் வழங்கப்படும்.

English summary
ITM-Group has signed an MOU with Kotak Education Foundation, a social initiative for the underprivileged children and youth by Kotak Mahindra Bank. The main objective of the partnership is to help the underprivileged students by offering the best opportunity possible.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X