For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரளா வெங்கரா சட்டசபை தொகுதி இடைத் தேர்தல்: முஸ்லிம் லீக் வேட்பாளர் கே.என்.ஏ. காதெர் அமோக வெற்றி!

கேரளாவின் வெங்கரா சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் முஸ்லிம் லீக் வேட்பாளர் கே.என்.ஏ. காதெர் அமோக வெற்றி பெற்றார்.

By Mathi
Google Oneindia Tamil News

திருவனந்தரபும்: கேரளா வெங்கரா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் முஸ்லிம் லீக் வேட்பாளர் காதெர் 23,310 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றது.

மலப்புரம் மாவட்டம் லோக்சபா தொகுதியில் வென்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அகமது காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் குஞ்சாலி குட்டி போட்டியிட்டு வென்றார்.

IUML wins Kerala's Vengara assembly bypoll

இதையடுத்து தமது வெங்கரா தொகுதி எம்.எல்.ஏ. பதவியை குஞ்சாலி குட்டி ராஜினாமா செய்தார். இதனால் வெங்கரா சட்டசபை தொகுதிக்கான இடைத் தேர்தல் கடந்த 11-ந் தேதி நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் காதெர் போட்டியிட்டார். அதேபோல் இடதுசாரிகள் கூட்டணியின் பஷீர், எஸ்டிபிஐ-ன் நசீர், பாஜகவின் ஜனசந்திரன் ஆகியோர் இத்தொகுதியில் போட்டியிட்ட முக்கிய வேட்பாளர்கள்.

இத்தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இன்று காலை முதலே முஸ்லிம் லீக் வேட்பாளர் காதெர் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார்.

வாக்கு எண்ணிக்கை முடிவில் காதெர் 65,227 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இடதுசாரிகள் கூட்டணியின் வேட்பாளர் பிபி பஷீர் 41,917 வாக்குகள் பெற்றார். காதெர் மொத்தம் 23,310 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றார்.

எஸ்.டி.பி.யின் வேட்பாளர் நசீர் 8648 வாக்குகளையும் பாஜகவின் ஜனசந்திரன் 5728 வாக்குகளையும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Indian Union Muslim League (IUML) candidate K.N.A. Khader on Sunday won the Vengara by-election in Malappuram with a margin of 23,310 votes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X