For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கத்துவா வன்புணர்வு சம்பவம்.. காஷ்மீர் துணை முதல்வர் நிர்மல் சிங் பதவி விலகல்

காஷ்மீர் துணை முதல்வர் பதவியை பாஜக கட்சியை சேர்ந்த நிர்மல் சிங் ராஜினாமா செய்து இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    காஷ்மீர் துணை முதல்வர் நிர்மல் சிங் பதவி விலகல்- வீடியோ

    காஷ்மீர்: காஷ்மீர் துணை முதல்வர் பதவியை பாஜக கட்சியை சேர்ந்த நிர்மல் சிங் ராஜினாமா செய்து இருக்கிறார். காஷ்மீரில் 8 வயது சிறுமி கொல்லப்பட்டதை அடுத்து அவர் இந்த பதவி விலகல் முடிவை அறிவித்துள்ளார்.

    காஷ்மீரில் இருக்கும் கத்துவா என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது பள்ளி படிக்கும் சிறுமி ஒருவர் 7 பேரால் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த கொலை மற்றும் வன்புணர்வு வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    J&K Deputy CM Nirmal Singh resigns

    இதில் தொடர்புடைய எல்லோரும் பாஜக உள்ளிட்ட பல்வேறு இந்துத்துவா அமைப்புகளுடன் நெருக்கமாக இருப்பவர்கள். இந்த விஷயம் காரணமாக பாஜக கட்சியை சேர்ந்த சிலர், குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேசியுள்ளனர்.

    இதன் காரணமாக காஷ்மீரில் காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சிக்கும் பா.ஜ.கவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அமைச்சரவையில் இருக்கும் பாஜகவினர் அரசுக்கு எதிராக பேசினார்கள். இந்த நிலையில் தற்போது துணை முதல்வர் ராஜினாமா செய்துள்ளார்.

    இதனால் பாஜகவை சேர்ந்த துணை முதல்வர் நிர்மல் சிங் ராஜினாமா செய்துள்ளார். புதிய துணை முதல்வராக கவீந்தர் குப்தா தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இவரும் பாஜக கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Jammu and Kashmir Deputy Chief Minister resigned from Chief Minister Mehbooba Mufti' cabinet, a day before the reshuffle, said report.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X